ம.மா.நூ. ஹோல்புரூக் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க  கூட்டம் நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமை (11.06.2017) பாடசாலையின் கலந்துரையாடல் மண்டபத்தில் அதிபரின் தலைமையில் காலை 10 மணிக்கு  ஆரம்பமானது. 

பழையமாணவர் சங்க  தலைவராக பாடசாலையின் முதல்வரே இருப்பார் என்ற சட்டதிட்டத்திற்கு அமைய பாடசாலையின் அதிபர் ஜெயராம் தலைவராக பொறுப்பேற்றார். 

தொடர்ந்து பழையமானவர் சங்க நிருவாக குழு தெரிவு இடம்பெற்றது. அதனடிப்படையில் செயலாளராக க.தனபாலசிங்கமும் பொருளாலராக சசிகுமாரும் மேலும் உப செயலராக ஷர்மிளாவும் உப பொருளாலராக மனோகரனும் தெரிவு செய்யப்பட்ட அதேவேளை நிருவாக குழு உறுப்பினர்களாக  நடராஜா (அதிபர்), சந்திரசேகர், புண்ணிய மூர்த்தி, சுகந்தி, ரமேஷ், பாக்கியநாதன், செல்வகுமார், சுதாகரன், தியாகராஜா, கிருபாகரன் ஆகியோர் தெரிவு  செய்யப்பட்டனர்.