சூனியம் வைத்­தேனும் என்னை அழிக்க முயற்சி : ஒரு­போதும் அச்­ச­ம­டை­ய­மாட்டேன்

Published By: Robert

15 Jun, 2017 | 09:44 AM
image

என்­மீது இருக்கும் அச்சம் கார­ண­மாக சூனியம் வைத்­தேனும் என்னை அழிக்க  சிலர் முயற்­சிக்­கின்­றனர். இவர்­களின் இவ்­வா­றான செயல்­க­ளுக்கு நான் ஒரு­போதும் அச்­சப்­ப­டப்­போ­வ­தில்லை. இதன் கார­ண­மாக நாங்கள் மேலும் வலு­வ­டைவோம் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

மேலும் நான் பொது வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கிய போதுதான் சுயா­தீன தொலைக்­காட்சி சேவை தனது சுயா­தீ­னத்­தன்­மையை இழந்­தது எனவும் குறிப்­பிட்டார்.

சுயா­தீன தொலைக்­காட்சி ஊடக சேவையின் 38ஆவது வருட ஆண்டு நிறைவு விழாவை முன்­னிட்டு புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்­டி­ருந்த 5 மாடி கட்­டிட தொகு­தியை திறந்­து­வைக்கும் நிகழ்வு பத்­த­ர­முல்­லையில் அமைந்­துள்ள சுயாதீன் தொலைக்­காட்சி சேவை தலை­மை­ய­கத்தில் நேற்று இடம்­பெற்­றது.

இதில் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே ஜனா­தி­பதி  இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

சுயா­தீன தொலைக்­காட்சி சேவை­யா­னது  ஊடக நிறு­வனம் ஒன்­றுக்கு இருக்­க­வேண்­டிய சுயா­தீனம், ஊடக தர்மம், ஒழுக்கம் போன்­ற­வற்றை பேணி வந்து 38வரு­டத்தை இன்று பூர்த்தி செய்­துள்­ளது.1977 ஆம் ஆண்­டுக்கு முற்­பட்ட காலங்­களில் அரச ஊட­கங்­களே இருந்து வந்­தன. அதன் பின்­னரே   தனியார் ஊட­கங்கள் விரி­வ­டைந்­தன.

 நவீன உலகில் நவீன தொழி­நுட்­பத்­துடன் வாழும் மனி­தனை நெறிப்­ப­டுத்த ஊட­கங்­களின் பங்­க­ளிப்பு அத்­தி­யா­வ­சி­ய­மாகும். ஊட­கத்தில் ஆரோக்­கி­யத்­தன்மை, மனி­தா­பி­மானம், கட்சி பேத­மற்ற தன்மை என்­பன மிகவும் அத்­தி­யா­வ­சி­ய­மா­ன­தாகும். அதனால் ஊடக நிறு­வு­னர்கள், ஊட­க­வி­ய­லா­ளர்கள் ஊடக பிர­தா­னிகள் அனை­வ­ருக்கும் அனைத்து நாடு­க­ளிலும் தங்கள் தேசத்தை கட்­டி­யெ­ழுப்பும் பொறுப்பு சாட்­டப்­ப­டுள்­ளது. 

அத­ன­டிப்­ப­டையில் சுயா­தீன தொலைக்­காட்சி நிறு­வனம் 38 வரு­ட­காலம் தனது பொறுப்பை மிகவும் சிறந்த முறையில் மேற்­கொண்டு வந்­துள்­ளது. என்­றாலும் இந்த நிறு­வனம் மீது மக்கள் வைத்­தி­ருந்த கெள­ரவம்,நம்­பிக்கை மற்றும் அதன் சுயா­தீனம் என்­ப­வற்றை நான் பொது­வேட்­பா­ள­ராக அரசில் இருந்து வெளியில் வந்­த­போ­துதான் அது இழந்­தது. 

நாட்டில் இருக்கும் எந்­த­வொரு தேசிய தலை­வரும் எந்­த­வொரு ஜனா­தி­பதி, பிர­தமர் வேட்­பா­ளரும் என்­னை­விட இந்த நிறு­வ­னத்தால் அசிங்­கப்­ப­ட­வில்லை.  காயப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. என்­றாலும் சிறிய குடும்­பத்தில் இருந்­து­வந்த நான் பாரிய சவா­லாக இருந்­த­மை­யால்தான் இன்றும் பெரி­ய­வர்கள் என்று சொல்­லக்­கூ­டி­ய­வர்கள் மிகவும் கீழ்­மட்­டத்­துக்கு சென்று என்னை தாக்க, விமர்­சிக்க முற்­பட்­டனர் என்­பதை நினைத்து மகிழ்ச்­சி­ய­டை­கின்றேன்.

அத்­துடன் வர­லாற்றில் அரச ஊட­கங்கள் மிகவும் முறை­யற்ற  முறையில் பயன்­ப­டுத்­தப்­பட்­டன.  நான் பொது வேட்­பா­ள­ராக வந்­த­போதே அது நடந்­தது. குறிப்­பாக சுயா­தீன தொலைக்­காட்சி நிறு­வனம் 38 வரு­டங்கள் அனு­பவம் நிறைந்த நிலையில் கடந்த 2வரு­டங்­க­ளுக்கு முன்னர் மிகவும் மோச­மான முறையில் பயன்­ப­டுத்­தப்­பட்­டது நான்­பொது வேட்­பா­ள­ராக வந்­த­போது என்­பதே உண்­மை­யாகும்.  

எனக்கு எதி­ராக எந்த நட­வ­டிக்­கைகள் விமர்­ச­னங்கள் மற்றும் காயப்­ப­டுத்­தல்­களை   மேற்­கொண்­டாலும் பெளத்தன்   என்­ற­வ­கையில் நான் பொறு­மை­யாக செயற்­ப­டுவேன். எதி­ராக செயற்­ப­டப்­போ­வ­தில்லை. அத்­துடன் அனு­ரா­த­புரம் ஹொர­வ­பொத்­தான  பிர­தே­சத்தில் எனக்கு சூனியம் வைத்­துள்­ள­தாக இன்று பத்­தி­ரி­கை­களில் பிர­சு­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது. அன்று நான் பொது­வேட்­பா­ள­ராக இருக்­கும்­போது இருந்த சவால்­க­ளுக்கு முகம்­கொ­டுக்க முடி­யா­மல்­போ­ன­த­னால்தான் சூனி­யம்­வைத்­தேனும் என்னை அச்­சு­றுத்த முயற்­சிக்­கின்­றனர். இவர்­களின் இந்த சூனி­யங்­க­ளுக்கு நான் ஒரு­போதும் நிலை­கு­லை­ய­மாட்டேன். இதன்­மூலம் நாங்கள் மேலும் சக்­தி­பெ­றுவோம்.

அத்­துடன் அன்று சுயா­தின தொலைக்காட்சி நிறுவனம் எனக்கு எதிராக செற்பட்டாலும் நிறுவனத்தின் அதிகாரிகள் மீது நான் ஒருபோதும் வைராக்கியம் வைக்கமாட்டேன். ஏனெனில் அவர்களை பின்னால் இருந்து இயக்கியவர்கள் யார் என்று எனக்கு தெரியும். மக்கள் அவர்களுக்கு  தீர்ப்பளித்து வீட்டுக்கு அனுப்பினார்கள். எனவே கடந்த காலத்தைப்போன்று  இந்த ஊடக நிறுவனம் செயற்படாமல் சுயாதீன ஊடக நிறுவனமாக செயற்பட பிரார்த்திக்கின்றேன் என்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27