நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா நகரின் பாதசாரிகள் கடவையில் பாதை கடக்க முற்பட்ட. 7 வயது சிறுமி மீது கனரக வாகனம் மோதுண்டதில் சிறுமி ஸ்தலத்திலே பலியானார். ஆத்திரமுற்ற பொதுமக்கள் கனரக வாகனத்திற்கு தீ வைத்துள்ளனர். 

நானுஓயா ரயில் மேம்பாலத்திற்கருகில்  உள்ள  பாதசாரிகள் கடவையில் இன்று காலை 8 மணியளவில் இவ் விபத்து சம்பவித்துள்ளது. 

நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த கனரக வாகனமே  இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணை நானுஓயா பொலிஸார் மேற்கொள்கின்றனர்.