இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் குமார் சங்கக்காரா ,  இங்கிலாந்தின் சர்ரே அணிக்காக விளையாடிய உள்ளூர் முதல்தர ஒரு நாள் போட்டியில் சதம் பெற்றதன் மூலம் முதல்தர மற்றும் முதல்தர ஒரு நாள்  போட்டிகளில் 100ஆவது சதத்தினை பதிவு செய்து சதத்தில் சதமடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

லண்டன் றோயல் கிண்ணத் தொடரில் யோர்க்ஷயர் அணிக்கெதிராக நேற்றைய தினம் இடம்பெற்ற போட்டியில் அவர் 121 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இதன் மூலம் அவர் தனது 100 ஆவது சதத்தினை பூர்த்தி செய்திருந்தார். 

சங்காவின் இந்த 100ஆவது சதத்தின் உதவியுடன், நேற்றைய போட்டியில் சர்ரேய அணி 24 ஓட்டங்களால் யோர்க்ஷயர் அணியினை வெற்றிகொண்டதையடுத்து தொடரின் அரையிறுதிப் போட்டிற்கும் தெரிவாகியுள்ளது.

39 வயதாகும் குமார் சங்கக்கார, இதுவரையில் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் மொத்தமாக 45,529 ஓட்டங்களை குவித்துள்ளார்.

இதேவேளை, 2015ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற குமார் சங்கக்கார, இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும், பருவகாலப் போட்டிகளைத் தொடர்ந்து முதல்தரப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

குமார் சங்கக்கார முதல்தரப் போட்டிகளில் தொடர்ச்சியான ஆறாவது சதத்தினை பூர்த்தி செய்து சாதனை ஒன்றினை பதிவு செய்ய இருந்தும் அதனை செற்ப ஓட்டங்களால் தவறவிட்டிருந்தார்.

சர்ரே அணி இறுதியாக விளையாடிய முதல்தர போட்டியில் 13 ஓட்டங்களால் ஒரு அபூர்வ சாதனையை தவறவிட்டிருந்தார்.

அந்தப் போட்டியிலும் சதமடித்திருப்பாராயின், டொன் பிரட்மனின் முதல்தர போட்டிகளில் தொடர்ச்சியான 6 சதம் எனும் சாதனையை படைத்திருப்பார்.