மேற்கு லண்டனில் பயங்கர தீ விபத்தால் 27 மாடி கட்டிடமான கிரென் பெல் டவர் பற்றி எரிந்துகொண்டிருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தீயை அணைக்கும் பணியில் 40 தீயணைப்பு வாகனங்களுடன் 200 தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மீட்புப் பணியாளர்கள் கட்டடத்தில் உள்ளவர்களை வெளியேற்ற முயற்சித்து வருகின்றனர். 

லண்டனின் மேற்கு பகுதியில் லதிமர் சாலையில் உள்ள கிரென்பெல் டவர் 27 மாடி கட்டிடமாகும். இதன் மேற்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

குறித்த தீ விரைவாக  அனைத்து தளங்களுக்கும் பரவியது. இதனால் ஒட்டுமொத்தமாக 27 மாடி கட்டிடமும் பயங்கரமாக எரிந்து வருகிறது. இப்பயங்கர தீவிபத்தால் ஒட்டுமொத்த கட்டிடமுமே இடிந்து விழும் அபாயம் உள்ளது.

இதேவேளை, குறித்த  அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது மாடியில் பரவிய தீ யினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக லண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

லண்டனில் அடுத்தடுத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் இந்த தீ விபத்தும் கூட தீவிரவாதிகளின் சதிசெயலாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது. 

அங்கு தீடீரென கட்டடத்தின் மேல் வெளிச்சம் ஒன்றை காண முடிந்ததாகவும் அது விளக்கு என தாம் எண்ணியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் காயமடைந்த இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலர் காயமடைந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. 

இதேவேளை, காயமடைந்தவர்கள் அல்லது சேத விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.

நள்ளிரவு நேரம் என்பதால் பெருமளவானோர் வீடுகளில் தங்கிருந்துள்ளனர். அதில் பலர் உயிருக்கு பயந்து கட்டில்களுக்கு அடியில் பாதுகாப்பு தேடியுள்ளதாக தெரியவருகிறது. எனினும் இந்த அனர்த்தம் காரணமாக பல உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.