சிறைக் கைதிகள் நலன்­புரி சங்­கத்தின் நூற்­றாண்டு விழா நேற்று பண்­டா­ர­நா­யக்க ஞாப­கா­ர்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் நடை­பெற்­றது. இந்­நி­கழ்­விற்கு பிர­தம அதி­தி­யாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கலந்து கொண்­டி­ருந்தார். இதன்­போது நிகழ்ச்சி நிரலின் பிர­காரம் பெளத்த மத அனுஷ்­டா­னங்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கா­மையின் கார­ண­மாக மண்­ட­பத்தில் அமர்ந்­தி­ருந்த பிக்கு ஒருவர் ஆக்­ரோ­ஷத்­துடன் எழுந்து ஜனா­தி­பதி முன்­னி­லையில் கடு­மை­யான எதிர்ப்­பினை வெளி­யிட்டார்.

இந்த சந்­தர்ப்­பத்தில் உரை­யாற்­று­வ­தற்­காக மேடைக்கு வந்­தி­ருந்த அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் கீழே சென்று பூரண மத அனுஷ்­டா­னங்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கு­மாறு ஆலோ­சனை வழங்­கினார். அதன்­பின்னர் ஆற்­றிய தனது உரையின் போது நிகழ்ந்த தவ­றுக்கு அமைச்சர் சுவா­மி­நாதன் மன்­னிப்பு கோரி­ய­துடன் தான் எந்த சந்­தர்ப்­பத்­திலும் இனப்­பா­கு­பாடு பார்ப்­பவன் அல்ல. அனைத்து மதங்­க­ளையும் மதிக்­கின்றேன் என்று குறிப்­பிட்டார்.

சிறைச்­சாலை கைதிகள் நலன்­புரி சங்­கத்தின் நூற்­றாண்டு விழா நேற்று மாலை பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் நடை­பெற்­றது. இந்­நி­கழ்வு சிறை­ச்சாலை கைதிகள் நலன்­புரி சங்­கத்­தினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. இந்­நி­கழ்­விற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டார். மேலும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு, புனர்­வாழ்வு, மீள்­கு­டி­யேற்ற மற்றும் இந்து மத விவ­கார அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் ,சிறைச்­சாலை மறு­சீ­ர­மைப்பு அமைச்சின் அதி­கா­ரிகள், சிறைச்­சாலை திணைக்­க­ளத்தின் அதி­கா­ரிகள் உள்­ளிட்ட பலரும் கலந்து கொண்­டனர்.

இதன்­போது நிகழ்வின் ஆரம்­பத்தில் வழ­மை­யான சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மான மத அனுஷ்­டா­னங்கள் செய்­யப்­பட்­டன. அதன்­பின்னர்  சிறைச்­சாலை கைதி­களின் நலன்­புரி சங்­கத்தின் அதி­கா­ரி­யொ­ருவர் வர­வேற்­புரை ஆற்­றினார். அதன்­பின்னர் உரை­யாற்­று­வ­தற்கு  சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு, புனர்­வாழ்வு, மீள்­கு­டி­யேற்ற மற்றும் இந்து மத விவ­கார அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் அழைக்­கப்­பட்டார். 

இதன்­படி அமைச்சர் டி.எம். சுவா­மி­நாதன் மேடைக்கு வந்து உரை­யாற்ற முற்­படும் போது திடீ­ரென ஆக்­ரோ­ஷ­மாக எழுந்த ரங்­கூல பக்தே ஞான­தஸ்ஸே தேரர், சிறைச்­சாலை கைதிகள் நலன்­புரி சங்­கத்தின் நூற்­றாண்டு விழா நிகழ்ச்சி நிரலின் பிர­காரம் பெளத்த மத அனுஷ்­டா­னங்­க­ளுக்கு முன்­னு­ரிமை கொடுப்­ப­தற்கு நேரம் ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும் அவ்­வாறு நடத்­தப்­ப­ட­வில்லை. பெளத்த மத அனுஷ்­டானம் நடக்­காமல் நிகழ்­வுகள் நடக்­கின்­றன.ஜனா­தி­ப­தியே நீங்கள் இதனை பார்க்­க­வில்­லையா? என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னி­லையில் சீறி­ப்பாய்ந்தார். இதன்­போது மண்­­டபத்தில் பெரும் சல­ச­லப்பு ஏற்­பட தொடங்­கி­யது.

இதன்­போது மேடையில் இருந்த அமைச்சர் டி.எம். சுவா­மி­நாதன் மத அனுஷ்­டா­னங்­க­ளுக்கு இட­ம­ளித்து கீழே இறங்கி வந்தார். அதன்­பின்னர் அனைத்து மதங்­களின் பூரண அனுஷ்­டான நிகழ்வு நடந்­தே­றி­யது. அதன் பின்னர் உரை நிகழ்த்த வந்த அமைச்சர் டி.எம் சுவாமிநாதன், இந்நிகழ்வில் நடந்த தவறுக்கு நான் வருந்துகின்றேன். 

இது என்னுடைய ஏற்பாட்டில் நடந்தவையல்ல. நான் இனப்பாகுபாடு பார்ப்பவன் அல்ல. அனைத்து மதங்களையும் நான் மதிக்கின்றேன். தற்போது கூட கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவில் கலந்து கொண்டுதான் இங்கு வந்துள்ளேன் என்றார்.