தண்டப்பணம் செலுத்தமுடியாமல் சிறைகளிலுள்ளோர் தொடர்பில் கொள்கைத் தீர்மானம் எடுக்கப்படும் : ஜனாதிபதி

Published By: Robert

14 Jun, 2017 | 09:27 AM
image

சிறிய குற்றங்களுக்காக விதிக்கப்பட்ட தண்டப்பணத்தை செலுத்தமுடியாமல் சிறைகளிலுள்ளோருக்காக எதிர்காலத்தில் கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பதற்காக உரிய தரப்பினருடன் கலந்துரையாடவிருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். 

2015 ஆண்டில் 43.7 சதவீதமான கைதிகள் தண்டப்பணம் செலுத்த முடியாமையினாலேயே சிறைகளிலிருந்ததை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அது அபத்தமானது எனவும், தற்போதுள்ள சட்டதிட்டங்கள், கொள்கைகள் மற்றும் சமூக அமைப்புகள் ஊடாக அதற்கான துரித தீர்வை எட்டவேண்டுமென குறிப்பிட்டார். 

இலங்கை சிறைக்கைதிகள் நலன்புரி சங்கத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நேற்று கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, கைதிகள் இல்லாத சமூகத்தை உருவாக்குவதற்காக அனைவரும் பாடுபட வேண்டும் எனவும், சிறைகளில் உள்ளவர்களை மனிதாபிமானத்துடன் நோக்கி அவர்கள் அந்த நிலைக்கு வருவதற்கு காரணமான சமூக நிலையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அனைவரதும் பொறுப்பாகும் என்று தெரிவித்தார். 

கைதிகள் மற்றும் சிறைச்சாலைகளின் வசதிகள் தொடர்பில் தற்போதுள்ள நிலையைத் தாண்டி மனிதாபிமானம் மிக்க திட்டத்தை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். 

கைதிகளில் 46.4 சதவீதமானோர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் காரணமாக சிறையிலிருப்பதாக அறிக்கைகள் தெரிவிப்பதாகவும், அது 2011 ஆண்டுடன் ஒப்பிடப்படும் போது தெளிவான அதிகரிப்பாகும் எனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, போதைபொருள் தொடர்பில் சட்டத்தை அமுல்படுத்தலின் வினைத்திறனை அது காட்டுவதாகவும் குறிப்பிட்டார். 

எவ்வாறாயினும் போதைப்பொருளற்ற சமூகத்தை உருவாக்குவதற்காக இதனைவிடவும் வினைத்திறனான திட்டத்தின் தேவை ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

கைதிகளின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் ஜனாதிபதியால் வழங்கப்பட்டதுடன், சிறைக்கைதிகள் நலன்புரி சங்கத்தினால் ஜனாதிபதிகளுக்கு நினைவு பரிசொன்று வழங்கப்பட்டது. 

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், சிறைக்கைதிகள் நலன்புரிச்சங்க தலைவர் பீ.ஏ.கிரிவந்தெனிய, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் எச்.எம்.என்.பீ.தனசிங்க உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55