(ஆர்.யசி)

அரசியல் அமைப்பின் நிலைப்பாடுகள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் நேரடி கலந்துரையாடல் ஒன்றை ஏற்படுத்தி தருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான குழு தெரிவித்துள்ளது. 

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையுடன் பரஸ்பர முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது. 

புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் ஆராயும் வகையில் பிரதான இரண்டு கட்சிகளும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதாக கடந்த வாரம் இரண்டு கட்சிகளும் தெரிவித்திருந்த நிலையில் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் உள்ள முரண்பாடுகளைத் தீர்க்கும் வகையில் இந்த சந்திப்பை ஏற்படுத்தவுள்ளது.

உத்தேச அரசியலமைப்புச் சட்டத்தில் காணப்படும் கருத்து முரண்பாடு கொண்ட விடயங்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுடன் நேரடி கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்துதருமாறு  நாம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் என்ற வகையில்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளளோம்.

அரசியலமைப்பு தொடர்பான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசனைக் குழுவாக நியமிக்கப்பட்ட குழுவாக  இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.