நேற்றைய தினம், நியூ­ஸி­லாந்தின் ஒக்லான்ட் மைதானத்தில் இடம் பெற்ற நியூ­ஸி­லாந்து அணிக்கு எதிரான முதலாவது சர்வதேச இருபதுக்கு20 கிரிக்கட் சுற்றுப்போட்டியில் பாகிஸ்தான் அணி 16 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூ­ஸி­லாந்து அணித் தலைவர், களத்தடுப்பினை தெரிவு செய்தார்.இதற்கமைய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில், 8 விக்கட்டு இழப்பிற்கு 171 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

மொஹமட் ஹபீஸ் 61 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன், அணி தலைவர் சயீட் அப்ரிடி 8 பந்துக்ளுக்கு முகம் கொடுத்து 23 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.பந்துவீச்சில் எடம் மிலேன் 37 ஓட்டங்களை கொடுத்து, 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

172 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூ­ஸி­லாந்து அணி, 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 155 ஓட்டங்களையே பெற்றுக் கொண்டது.