வெற்றி வாய்ப்பு இலங்கை அணியின் பக்கம் இருந்த போதும் தனது நிதானமான துடுப்பாட்டத்தால் பாகிஸ்தான் அணியை வெற்றிபெறச் செய்த பாகிஸ்தான் அணித் தலைவருக்கு போட்டி கட்டணத்தில் 20 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு ஐ.சி.சி.யினால் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான நேற்றைய போட்டியின் போது பந்து வீசுவதற்கு ஒரு மணித் தியாலம் தாமதப்படுத்திய குற்றத்திற்காகவே சப்ராஷ் அஹமட்டுக்கு போட்டி கட்டணத்தில் 20 சதவீத அபராதமும் அணி வீரர்களுக்கு 10 வீத அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் சிறிது நேரம் பந்து வீசுவதற்கு தாமதித்தாலும் கூட, எதிர்வரும் போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படும் எனவும் சப்ராஷ் அஹமட்டுக்கு ஐ.சி.சி.யினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.