வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வு : மாதம்தோறும் வருகை தருவேன் - ஜனாதிபதி

Published By: Robert

13 Jun, 2017 | 10:44 AM
image

யாழ்.மாவட்­டத்­தி­லுள்ள காணி­களை விடு­விப்­பது குறித்து பாது­காப்புச் சபையில் இன்று கலந்­து­ரை­யா­ட­வுள்­ள­தாக தெரி­வித்த ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சேன, மாதம் ஒரு முறை யாழ்.மாவட்­டத்­திற்கு விஜயம் செய்­ய­வுள்­ள­தா­கவும் இம் மாவட்­டத்தில் காணப்­படும் பிரச்­சி­னை­க­ளு க்கு படிப்­ப­டி­யான தீர்­வு­களை வழங்­க­வுள்­ள­தா­கவும் தெரி­வித்தார்.

பொருத்து வீட்­டுத்­திட்­டத்­தினைமுன்­னெ­டுப்­பது குறித்து மக்­களின் விருப்­புக்­களை அறிந்த பின்­னரே நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­படும் என தெரி­வித்த ஜனா­தி­பதி, வடக்கின் அபி­வி­ருத்­தியில் விசேட கவனம் செலுத்­த­வுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார்.

யாழ். மாவட்ட அபி­வி­ருத்தி குறித்த விசேட கூட்­ட­மொன்று நேற்று திங்­கட்­கி­ழமை பிற்­பகல் 2 மணிக்கு மாவட்ட செய­லாளர் நா.வேத­நா­யகன் தலை­மையில் யாழ் மாவட்ட செய­ல­கத்தில் நடை­பெற்­றது.

இந்த கூட்­டத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அமைச்­சர்­க­ளான டி.எம். சுவா­மி­நாதன், ராஜி சேனா­ரத்ன ஆகியோர் பங்­கேற்­ற­தோடு வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன், யாழ்.மாவட்ட கூட்­ட­மைப்பு பாராளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மாவை சேனா­தி­ராஜா, த. சித்­தார்த்தன், எம்.ஏ.சுமந்­திரன், சி.சிறி­தரன், ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அங்­கஜன் இரா­ம­நாதன் , வட­மா­காண அமைச்­சர்­க­ளான குரு­கு­ல­ராஜா, சத்­தி­ய­லிங்கம், மாகாண சபை உறுப்­பி­னர்கள், பொலிஸ் மா அதிபர், அரச அதி­கா­ரிகள் படைத்­த­ரப்பு அதி­கா­ரிகள் எனப் பலர் கலந்­து­கொண்­டனர்.

முன்­னரே நிகழ்ச்சி நிரல் வழங்­கப்­ப­டாத நிலையில் கூட்டம் ஆரம்­பித்­தது. எனினும் அதன் பின்னர் சுற்­றாடல், பாது­காப்பு, வீதி அபி­வி­ருத்தி, மீள் குடி­யேற்றம், காணி விடு­விப்பு, சுகா­தார விட­யங்கள் என்­பன தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­வ­தாக நிகழ்ச்சி நிரல் ஒன்று அவ­ச­ர­மாக கைய­ளிக்­கப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து மக்கள் பிர­தி­நி­திகள் அடுத்­து­வரும் காலப்­ப­குதி மழை கால­மென்­பதால் வீதி­களை மீள் புன­ர­மைக்கும் செயற்­பா­டு­களை பூர்த்தி செய்ய வேண்டும். அவ்­வாறு செய்­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை விரைந்து மேற்­கொள்ள வேண்டும் என்று குறிப்­பிட்­டனர். 

அத்­துடன் வீதி நிர்­மா­ணத்­திற்­காக கிரவல் பெறு­த­லி­லுள்ள நெருக்­க­டிகள் மற்றும் இன்­னோ­ரென்ன விட­யங்கள் குறித்து ஜனா­தி­ப­தியின் கவ­னத்­திற்கு கொண்­டு­வந்­தனர். அத்­துடன் நிர்­மாண பணி­க­ளுக்­காக மணல் பெற்­றுக்­கொள்­வ­தி­லுள்ள நெருக்­க­டிகள் தொடர்­பிலும் கருத்­துக்­களை முன்­வைத்­தனர்.

இதன்­போது ஜனா­தி­பதி குறித்த பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வை எட்­டு­வ­தற்கு நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வேண்டும் என அதி­கா­ரி­க­ளி­டத்தில் வலி­யு­றுத்­தி­ய­தோடு குறிப்­பாக மணல் விவ­கா­ரத்­திற்கு ஒரு வார காலத்தில் தீர்­வ­ளிக்­கப்­பட வேண்டும் என குறிப்­பிட்டு ஜனா­தி­பதி செய­லாளர் ஒருவர், மாவட்ட அர­சாங்க அதிபர் உள்­ள­டங்­கிய குழு­வொன்­றையும் நிய­மித்தார். 

அத­னை­ய­டுத்து மீள் குடி­யேற்ற விடயம் சம்­பந்­த­மாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. இச் சம­யத்தில் மாவை சேனா­தி­ராஜா எம்.பி, வலி. வடக்கில் காணிகள் விடு­விக்­கப்­ப­டா­துள்­ளமை, விடு­விக்­கப்­பட்ட காணி­களில் மீள்­கு­டி­யேற்­றத்தில் உள்ள தாம­தங்கள் தொடர்­பாக எடுத்­து­ரைத்தார். அத்­துடன் இரா­ணுவம் காணி­களை கையகப் படுத்­தி­யுள்­ளதால் மீள் குடி­யேற்­றத்தில் தாம­தங்கள் நில­வு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

அதற்கு பதி­ல­ளித்த ஜனா­தி­பதி, நாளைய தினம் (இன்று) பாது­காப்புச் சபை கூட்டம் நடை­பெ­ற­வுள்­ளது. அதில் தாங்கள் குறிப்­பிடும் பகு­தி­யி­லுள்ள காணி­களை விடு­விப்­பது குறித்து பாது­காப்பு துறை­யி­ன­ரோடு கலந்­து­ரை­யாடி நட­வ­டிக்­கை­களை எதிர்­கா­லத்தில் எடுப்­ப­தா­கவும் குறிப்­பிட்டார்.

அதே­நேரம் மயி­லிட்டி துறை­முக விடு­விப்பு குறித்தும் மாவை.சேனா­தி­ராஜா எம்.பி கோரிக்­கையை முன்­வைத்­த­போது, யாழ்.பிராந்­திய படைத்­த­ரப்பு அதி­கா­ரிகள் அதற்­கு­ரிய நட­வ­டிக்கைள் எடுத்து வரு­தாக குறிப்­பிட்­டனர். 

இத­னை­ய­டுத்து சுமந்­திரன் எம்.பி ,வட மாகா­ணத்தில் பொருத்து வீட்டு திட்­டத்தை முன்­னெ­டுப்­பது தவ­ரா­னது அத்­திட்­டத்­தினை நிறுத்தி நிரந்­த­ர­மான கல் வீட்டு திட்­டத்­தினை முன்­னெ­டுக்­வேண்டும். அதுவே மக்­களின் ஏகோ­பித்த விருப்­ப­மாகும். அதனை தாங்கள் கவ­னத்தில் கொண்டு உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என ஜனா­தி­ப­தி­யி­டத்தில் கோரினார். 

இச் சம­யத்தில் குறித்த விடயம் தொடர்பில் மக்­களின் கருத்­துக்­களை கேட்­ட­றிந்த பின்னர் அது குறித்து முடி­வெ­டுக்­கலாம் என ஜனா­தி­பதி குறிப்­பிட்டார். ஏனினும் சுமந்­திரன் எம்.பி பொருத்து வீடு திட்­ட­மா­னது வட மாகா­ணத்­திற்கு பொருத்­த­மற்­றது என்­பதில் விடாப்­பி­டி­யாக இருந்தார்.

இத­னை­ய­டுத்து சிறி­தரன் எம்.பி இர­ணைத்­தீவு விவ­கா­ரத்தை ஜனா­தி­ப­தியின் கவ­னத்­திற்கு கொண்டு வந்தார். இர­ணைத்­தீவில் காணப்­படும் நிலங்கள் கடற்­ப­டை­யி­ன­ரி­டத்­தி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்டு மக்­க­ளி­டத்தில் கைய­ளிக்­கப்­பட வேண்டும் என்­பதை சுட்­டிக்­காட்­டினார்.

இதன்­போது அமைச்சர் சுவா­மி­நாதன், அங்கு அதி­ந­வீன ராடர்கள் பொருத்­தப்­பட்­டுள்­ள­மையால் அது பொது மக்­க­ளுக்கு பாதிப்­பாக அமையும். ஆகவே பொது­மக்­க­ளுக்கு மாற்று இடங்­களை வழங்­கு­வது குறித்து கலந்­து­ரை­யா­டல்கள் செய்­யப்­ப­ட­வுள்­ளது என்றார்.

இச்­ச­ம­யத்தில் சிறி­கரன் எம்.பி, பொது மக்கள் மீள் குடி­யேற்­றப்­பட்டால் ராடர்­களின் தாக்கம் இருக்கும் என்று கூறு­கின்­றீர்­களே அவ்­வா­றாயின் அங்கு எவ்­வாறு கடற்­படை வீரர்கள் தங்­கி­யி­ருக்­கின்­றார்கள் என்று கேள்வி எழுப்­பினார். அத்­தோடு கே­பா­ப்பு­லவு மக்கள் தொடர்ந்தும் போராடி வரு­கி­ன்றார்கள்.

அவர்­களின் நிலங்கள் விடு­விக்­கப்­பட வேண்டும். அத்­துடன் இணை­தீ­வி­லுள்ள ராடர்கள் அங்­குள்ள சிறு தீவு­க­ளுக்கு மாற்­றப்­பட்டு பொது­மக்கள் மீளக் குடி­ய­மர்த்­தப்­பட வேண்டும். மேலும் யாழ்.மாவட்­டத்­திற்கு வருகை தந்­துள்ள ஜனா­தி­பதி கிளி­நொச்­சிக்கும் வரு­கை­தந்து இதே­போன்ற ஒரு கூட்­டத்தை  நடாத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இத­னை­ய­டுத்து சுகா­தார தொண்டர் ஊழி­யர்­களின் பிரச்­சி­னைகள் தொடர்­பா­கவும் ஜனா­தி­ப­தியின் கவ­னத்­திற்கு கொண்டு வரப்­பட்­ட­தோடு, பட்­ட­தா­ரி­களின் பிரச்­சி­னை­களும் கவ­னத்­திற்கு கொண்டு செல்­லப்­பட்­டது.

அதன்­போது அமைச்சர் ராஜித சேனா­ரத்ன, இந்த பகு­தியில் மூன்று தசாப்­த­கா­ல­மாக அசா­தா­ரண நிலை­மைகள் இருந்­தன. அதனை நாம் கருத்திற் கொண்டு நட­டி­வக்­கை­களை எடுக்­க­வுள்ளோம். அந்த விடயம் சம்­பந்­த­மாக உரிய கவ­னத்­தினை செலுத்­து­கின்றேன் என்றார்.

மேலும் இக்­கூட்­டத்தில் பங்­கேற்­றி­ருந்த பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவிடத்தில் பொலிஸ் துறையில் என்ன பிரச்சினைகள் காணப்படுகின்றன எனக் கேள்வி எழுப்பியபோது, பொலிஸ் துறைக்கான விண்ணப்பங்கள் போதியளவில் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

இதேவேளை இரணைமடு குடிநீர் விவகாரம் தொடர்பாகவும் ஜனாதிபதியிடத்தில் அதிகாரிகளால் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. 

இந்நிலையில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, நான் அதிகாரமிக்க ஜனாதிபதியாக பணிப்புரைகளை யாருக்கும் விடுக்கவில்லை. மாறான பாதிப்படைந்த இந்தப் பகுதியினை அபிவிருத்தியில் முன்னேற்ற வேண்டும் என கருதுகின்றேன். அதற்காக அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்புக்களை எதிர்பார்க்கின்றேன். இன்று இந்தக் கூட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் வருகை தந்து தமது கருத்துக்களை முன்வைத்தமைக்கு எனது நன்றிகள் என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02