சிறு­மிகள் பாலியல் துஷ்­பி­ர­யோகம் : கைதான ஆறு சந்­தே­க­ந­பர்­க­ளுக்கும் பிணை

Published By: Robert

13 Jun, 2017 | 10:42 AM
image

மூதூர் பெரு­வெளி பாட­சாலை சிறு­மிகள்  பாலியல் துஷ்­பி­ர­யோக சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்ட சந்­தே­க­ந­பர்­களில் ஒருவர் நேற்று அடை­யாளம் காணப்­பட்­டுள்ளார். இந்த நிலையில்  கைது­செய்­யப்­பட்ட ஆறு சந்­தே­க­ந­பர்­களும்  பிணையில் செல்­வ­தற்கு  மூதூர் நீதி மன்றம்  நேற்று  அனு­மதி வழங்­கி­யுள்­ளது. 

சிறு­மிகள் பாலியல் துஷ்­பி­ர­யோக சம்­பவம் தொடர்­பான வழக்கு விசா­ரணை  நேற்று மூதூர் நீதிவான்  ஐ.என்.ரிஸ்வான் முன்­னி­லையில் இடம்­பெற்­றது.

 இந்த விசா­ர­ணை­யின்­போது சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்­டி­ருந்த ஆறு சந்­தே­க­ந­பர்­களும்  ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டனர்.  சம்­ப­வத்தை அடுத்து ஐவர் கைது­செய்­யப்­பட்­டி­ருந்­தனர். கடந்த சனிக்­கி­ழமை மற்­றொரு சந்­தே­க­நபர் கைது­செய்­யப்­பட்­டி­ருந்தார். இந்த  சந்­தே­க­ந­ப­ரையே  சாட்­சி­ய­ம­ளிக்­க­வந்த சிறு­மிகள்  நேற்று  அடை­யாளம் காட்­டி­யுள்­ளனர்.  

இந்த வழக்கு நேற்று  விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட போது குற்­றம்­சாட்­டப்­பட்ட சந்­தே­க­ந­பர்கள்   ஆறுபேர் சார்பில் எட்டு சட்­டத்­த­ர­ணிகள்  ஆஜ­ரா­கினர். பாதிக்­கப்­பட்ட சிறு­மிகள் சார்­பாக  ஏழு சட்­டத்­த­ர­ணிகள்  ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர். சந்­தே­க­ந­பர்கள்  சார்பில்  சட்­டத்­த­ரணி சாலியும்  பாதிக்­கப்­பட்ட சிறு­மிகள் சார்பில் சட்­டத்­த­ரணி ஸ்டெனிஸ்லஸ் செலஸ்டின்  ஆகியோர் தமது வாதங்­களை முன்­வைத்­தனர்.  பொலிஸார் தரப்பில்  மூதூர்  பொலிஸ் நிலைய அதி­காரி ஆஜ­ரா­கி­யி­ருந்தார். 

இதன்­போது இரண்­டா­வது அடை­யாள அணி­வ­குப்பை நடத்­து­மாறு நீதிவான் உத்­த­ர­விட்டார். இதற்­கி­ணங்க அடை­யாள அணி­வ­குப்பு இடம்­பெற்­றது. கடந்த சனிக்­கி­ழமை கைது செய்­யப்­பட்ட சந்­தே­க­ந­பரை  சாட்­சி­க­ளாக அழைக்­கப்­பட்ட இரு  சிறு­மிகள்  அடை­யாளம் காட்­டினர்.  அடை­யாள அணி­வ­குப்பை அடுத்து  விசா­ரணை இடம்­பெற்­ற­போது  சந்­தே­க­ந­பர்­களை  பிணையில் விடு­விக்­க­வேண்டும் என்று  அவர்­க­ளது  சட்­டத்­த­ர­ணி­களால் கோரிக்கை விடுக்­கப்­பட்­டது. இத­னை­ய­டுத்து சந்­தே­க­ந­பர்கள் ஆறு­பே­ரையும் 10 ஆயிரம் ரூபா  ரொக்­கப்­பி­ணை­யிலும்,   2 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான சரீ­ரப்­பி­ணை­யிலும் விடு­விக்­கு­மாறு   உத்­த­ர­விட்ட நீதிவான்  பிரதி ஞாயிற்­றுக்­கி­ழமை தோறும் சந்­தே­க­ந­பர்கள்  மூதூர் பொலிஸ் நிலை­யத்தில் கையெ­ழுத்­திட வேண்­டு­மென்றும் பணித்­துள்ளார். 

அடை­யாளம் காணப்­பட்ட  சந்­தே­க­ந­ப­ரான முக­ஹமட் ஹனிபா  றியாத்  என்­ப­வ­ரது கட­வுச்­சீட்டை நீதி­மன்றில் ஒப்­ப­டைக்­கு­மாறும்  நீதிவான்  பணிப்­புரை விடுத்­துள்ளார். 

பாலியல் துஷ்­பி­ர­யோக சம்­ப­வத்தை அடுத்து  கடந்த 5 ஆம் திகதி முத­லா­வது அடை­யாள அணி­வ­குப்பு நடை­பெற்­றது. இந்த அடை­யாள அணி­வ­குப்பில் கைது­செய்­யப்­பட்ட   ஐந்து  சந்­தே­க­ந­பர்கள்  ஆஜ­ராக்­கப்­பட்­ட­போதும்   பாதிக்­கப்­பட்ட மூன்று சிறு­மி­களும் இவர்­களை  அடை­யாளம் காட்­ட­வில்லை.  இத­னை­ய­டுத்தே  ஆறா­வது சந்­தே­க­ந­பரே  நேற்­றைய அடை­யாள அணி­வ­குப்பில் முன்­னி­றுத்­தப்­பட்­டி­ருந்தார். 

இதே­வேளை   இந்த வழக்கு விசா­ர­ணையை  குற்­றத்­த­டுப்பு பிரி­வுக்கு  மாற்­று­மாறும்   நீதி­பதி கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதி­ப­ருக்கு கட்­ட­ளைப்­பி­றப்­பித்­த­துடன்  அடத்த வழக்கு விசா­ர­ணையை எதிர்­வரும் 10ஆம் திக­திக்கு ஒத்­தி­வைத்தார். 

 இந்த வழக்கு  விசா­ர­ணையை பார்­வை­யி­டு­வ­தற்­காக  பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரும்  ரெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், கிழக்கு மாகாண அமைச்சர் சி. தண்டாயுதபானி,  உறுப்பினர்களான  ஜனா கருணாகரன், நாகேஸ்வரன்,  பிரசன்னா இந்திரகுமார்,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணபிள்ளை உட்பட பலரும் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08