அல் ஹுசைன் இலங்கையர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்

Published By: Robert

13 Jun, 2017 | 10:15 AM
image

ஐக்­கிய நாடு­களை சபை மனித உரி­மைகள்  ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைன் இலங்­கையின் சுயா­தீனத்தன்மை மீது தலை­யீடு செய்­கின்றார். எனவே அவரின் அநா­வ­சிய தலை­யீ­டுகள் தொடர்பில் ஐ.நா.மனித உரி­மைகள் பேர­வையின் தலை­வ­ரி­டத்தில் முறைப்­பாடு செய்­ய­வுள்ளோம்.   

அல் ஹுசைன் இலங்­கை­ய­ரி­டத்தில் பகி­ரங்க மன்­னிப்பு கோர வேண்டும் என்றும் வலி­யு­றுத்தப் போவ­தாக   ரியர் அட்­மிரல் சரத் வீர­சே­கர தெரி­வித்தார்.

தேசிய அமைப்­புக்­க­ளுக்­கான அலு­வ­ல­கத்தில் நேற்று  இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில், எமது நாடு முகம் ­கொ­டுத்த அச்­சு­றுத்­த­லான நிலை­மையை மக்கள் இன்று உணர வேண்டும். இல்­லா­விடின் நாட்டில் நிலவும் ஒற்­றை­யாட்­சிக்கு பங்கம் ஏற்­ப­டக்­கூடும். இதனை ஐக்­கிய நாடுகள்  மனித உரி­மைகள் பேர­வையில் இம்­மாதம் இடம்­பெ­ற­வுள்ள அமர்­வு­களில் கலந்து கொண்டும்   வலி­யு­றுத்­துவோம்.

அண்­மையில் சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்­தினால் ஒரு தீர்­மானம் கொண்­டு­வ­ரப்­பட்­டது.  நீதி­மன்­றத்தை  அவ­தூறு செய்­ப­வர்­க­ளுக்கு எதி­ராக உட­ன­டி­யாக சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்ற பரிந்­து­ரையை மையப்­ப­டுத்­தியே மேற்­படி தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டது. இவ்­வா­றி­ருக்­கின்ற போது ஐக்­கிய நாடுகள் சபை மனித உரி­மைகள் பேர­வையின் சுயா­தீன நீதி­ப­திகள் சட்­டத்­த­ர­ணி­க­ளுக்­கான விசேட பிர­தி­நிதி மொனிகா பின்டோ இலங்­கையின் நீதி­மன்ற கட்­ட­மைப்பு குறித்து போலி­யா­னதும் பார­தூ­ர­மா­ன­து­மான கருத்­து­களை வெளி­யிட்­டுள்ளார்.

அவர் இலங்­கையில் நீதி­மன்றம் அர­சியல் சார்­புடன் செயற்­ப­டு­கின்­றது, நீதி­ப­திகள் ஓய்­வு­பெற்­றதன் பின்னர் அரச துறை­களில் உயர்­ப­த­வியில் அமர்­வ­தற்­காக அர­சாங்­கத்­திற்கு பக்­கச்­சார்­பாக செயற்­ப­டு­கின்­றார்கள், தமிழ் பிர­ஜை­களின் வழக்­குகள் கார­ண­மின்றி காலம் தாழ்­த்தப்­ப­டு­கின்­றன என்று கூறி­யுள்ளார். 

மேற்­படி கார­ணங்­க­ளினால் நீதி­மன்­றத்தின் மீது மக்கள் நம்­பிக்கை இழந்­துள்­ளார்கள் என்றும் கூறி­யுள்ளார். அவர் வெளி­நாட்டு பிரஜை. ஆனால்   மனோரி முத்­து­ஹெட்­டி­கம தலை­மை­யி­லான நல்­லி­ண­க்க செய­ல­ணியை சேர்ந்த பதி­னொ­ரு­ பேரும் இவ்­வா­றான குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைக்­கின்­றனர். எனவே இவர்­க­ளுக்கு எதி­ராக எமது அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்தால் சட்ட நட­வ­டிக்கை எடுப்போம்.

மேற்­கு­றிப்­பிட்ட நல்­லி­ணக்கச் செய­லணி  நல்­லி­ணக்கம் என்ற பெயரில் செய்யும் பரிந்­து­ரை­களை தமிழ்ச் செல்வன் இருந்­தி­ருந்தால் கூட செய்­தி­ருக்­க­ மாட்டார். 

அவ்­வா­றி­ருக்­கின்ற போது ஐக்­கிய நாடுகள் சபை மனித உரி­மைகள் பேர­வையின் ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைன் எமது நாட்டு நீதி­மன்­றத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று கூறி கலப்பு நீதி­மன்­றத்தை பரிந்­து­ரைக்­கின்றார். அதனால் அவரை விடவும்  அதி­கா­ரங்­களை கொண்ட ஐக்­கிய நாடுகள் சபையின் தலை­வ­ரி­டத்தில் செய்ட் அல் ஹுசைன் தொடர்பில் முறைப்­பாடு செய்வோம்.

புதிய அர­சி­ய­ல­மைப்பு  உரு­வாக்கம், அதி­காரப்பகிர்வு உள்­ளிட்ட விட­யங்­களில் அல் ஹுசைனின் அழுத்தம் குறித்தும் நாம் முறைப்­பாடு செய்வோம். அதேபோல் அவர் இலங்கை மக்­க­ளி­டத்தில் பகி­ரங்க மன்­னிப்பு கோர வேண்டும் என்றும் வலி­யு­றுத்­துவோம். இன்றும் சம்­பந்தன், விக்­கி­னேஸ்­வரன் உள்­ளிட்­ட­வர்கள் தமிழ் மக்­க­ளுக்­காக குரல் கொடுப்­ப­தாக கூறிக்­கொண்­டாலும் தமிழ் மக்களுக்காக அவர்கள் ஒரு துளி இரத்தம் கூட வழங்கியதில்லை. மாறாக இராணுவத்தினரே வழங்கியுள்ளனர். அதனால் நாங்கள் இனவாதிகள் இல்லை என்பது தெரிகின்றது.

தமிழர்களுக்குள்  உள்ள குல பேதத்தை தக்க வைத்துக்கொள்வதற்காகவே சிங்களவர்கள் தமிழர்களை தாக்குகின்றார்கள்  என்ற கருத்துக்களை கூறிக்கொண்டிருக்கின்றார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34