இறுதி யுத்­தத்­தின்­போது சர­ண­டைந்­த­வர்கள், தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள­வர்கள் தொடர்­பான பெயர் விப­ரங்க­ளையும் எங்­கெங்கு தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்­ளார்கள் என்­பது தொடர்பான விப­ரங்­க­ளையும் வெளியி­டுமாறு தேசிய பாது­காப்பு சபைக்கு உத்­த­ர ­வி­டுவேன் என்று  காணா­ம­லாக்­கப்­பட்­டோரின் உற­வி­னர்கள் மற்றும் சிவில் சமூகப் பிர­தி­நி­தி­க­ளிடம்  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வாக்­கு­று­தி­ய­ளித்­துள்ளார்.

ஜனா­தி­ப­திக்கும் காணா­ம­லாக்­கப்­பட்­டோரின் உற­வி­னர்­களின் பிர­தி­நி­திகள் மற்றும் சிவில் சமுகப் பிர­தி­நி­தி­க­ளு­மி­டை­யி­லான சந்­திப்பு யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள வட­மா­காண ஆளு­நரின் அலு­வ­ல­கத்தில் நேற்று மாலை நடை­பெற்­றது. இந்த சந்­திப்­பின்­போதே ஜனா­தி­பதி இந்த உறு­தி­மொ­ழியை வழங்­கி­யுள்ளார்.

காணாமல் போனோ­ரது உற­வி­னர்கள் தமது உற­வு­களை மீட்டுத் தரு­மாறு கோரி தொடர்ச்­சி­யான போராட்­டத்தில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். அண்­மையில் கிளி­நொச்­சியில் காணாமல் போனோ­ரது உற­வி­னர்கள் வீதி மறியல் போராட்­டத்­தினை நடத்­தி­யி­ருந்­தனர். ஜனா­தி­ப­தியை சந்­தித்து தாம் பேச வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை விடுத்­தி­ருந்­தி­ருந்­தனர். இத­னை­ய­டுத்து ஜனா­தி­ப­தியை சந்­திப்­ப­தற்கு ஏற்­பாடு செய்­யப்­ப­டு­மென்று ஜனா­தி­பதி செய­லகம் உறுதி அளித்­தை­ய­டுத்தே வீதி மறியல் போராட்­டத்தை இவர்கள் கைவிட்­டி­ருந்­தனர். 

இதற்­கி­ணங்க ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் செய்தே யாழ். செய­ல­கத்தில் விசேட அபி­வி­ருத்தி குழுக் கூட்­டத்தில் பங்­கேற்ற பின்னர் ஆளுநர் அலு­வ­ல­கத்தில் காணாமல் போனோ­ரது பிர­தி­நி­தி­க­ளையும் சிவில் சமூக பிர­தி­நி­தி­க­ளையும் சந்­தித்து பேசி­யி­ருந்தார். இந்தச் சந்­திப்பில் அமைச்­சர்­க­ளான ராஜித சேனா­ரத்ன, டி.எம்.சுவா­மி­நாதன், ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வட மாகாண சுகா­தார அமைச்சர் சத்­தி­ய­லிங்கம் ஆகி­யோரும் பங்­கேற்­றி­ருந்­தனர். 

குறித்த சந்­திப்புத் தொடர்பில் சிவில் சமூகப் பிர­தி­நி­திகள் சார்பில் கலந்து கொண்ட சட்­டத்­த­ரணி குமா­ர­வ­டிவேல் குரூ­பரன் கருத்துத் தெரி­விக்­கையில்,

2009  ஆம் ஆண்டு இறுதி யுத்­தத்தின் போது இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைந்த மற்றும் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­வர்­களின் பெயர் விப­ரங்­களை முழு­மை­யாக வெ ளியி­டப்­ப­ட­வேண்டும். புனர்­வாழ்வு முகாம்­க­ளிலும் தடுப்பு முகாம்­க­ளிலும் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள உற­வு­களின் விப­ரங்­க­ளையும் எங்­கெங்கு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளார்கள் என்ற விப­ரங்­க­ளையும் முழு­மை­யாக வெ ளியி­டப்­ப­ட­வேண்டும். 

1983 ஆம் ஆண்டு முதல் தடுப்பு முகாம்கள் இர­க­சிய தடுப்பு முகாம்கள் எங்­கெங்கு அமைக்­கப்­பட்­டுள்­ளன. யார்யார் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்­ளார்கள் என்­ப­தனை ஆண்­டு­வா­ரி­யாக வெளி­யிட வேண்டும். இத்­த­கைய கோரிக்­கை­களை நாம் முன்­வைத்­த­துடன் அதற்­காக மக­ஜ­ரையும் ஜனா­தி­ப­தி­யிடம் ஒப்­ப­டைத்தோம். இக்­கோ­ரிக்­கை­களை ஜனா­தி­பதி வாசித்­த­துடன் இன்­றைய  தேசிய பாது­காப்பு சபையின் மாதாந்­தக்­கூட்­டத்தில் குறித்த கோரிக்கை தொடர்­பான விப­ரங்­களை வெளி­யி­டு­மாறு உத்­த­ர­வி­ட­வுள்­ள­தா­கவும் வாக்­கு­று­தி­ய­ளித்தார். 

இதே­வேளை காணா­மல்­போனோர் சார்பில் கலந்­து­கொண்ட பிர­தி­நிதி ஒருவர் குறித்த விப­ரத்­தினை எங்­கு­பெற்­றுக்­கொள்­ளலாம் என ஜனா­தி­ப­தி­யிடம் கேட்­ட­தற்குஇ ஜனா­தி­பதி எங்­கு­பெற்­றுக்­கொள்­ளலாம் எப்­போது வெ ளியி­டப்­படும் என்­ப­தனை உட­ன­டி­யாக கூற முடி­யாது விட்­டாலும் விப­ரங்­களை வெளி­யிட  உத்­தி­ர­வி­ட­வுள்ளேன் எனத் தெரி­வித்தார்.

மேலும் ஜனா­தி­பதித் தேர்­த­லின்­போது வெ ளியி­டப்­பட்ட பிர­சு­ரங்­களில் புகைப்­ப­டங்கள் பிர­சு­ரிக்­கப்­பட்­டமை மற்றும் சிறைச்­சா­லையில் ஒருவர் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்­பாக கேள்­வி­கேட்­கப்­பட்ட போது,  இது தொடர்பில் குழு­வொன்றை அமைப்­ப­தாக தெரி­வித்­துள்ளார். எனினும் காணா­ம­லாக்­கப்­பட்­டோரின் உற­வி­னர்கள் குழு அமைப்­பது தொடர்பில் ஏற்­றுக்­கொள்­ளாத தன்­மையை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர்.

இதே­வேளை ஜனா­தி­ப­தியின் இக் கருத்துத் தொடர்பில் சிவில் சமூகப் பிர­தி­நி­திகள் என்­ற­வ­கையில் நாங்கள் மிகவும் அவ­தா­ன­மாக செயற்­பட்டு வரு­கின்றோம்.  சர­ண­டைந்­த­வர்கள் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்­ள­வர்கள் தொடர்­பி­லான விப­ரங்­களை வெளி­யிட கட்­ட­ளை­யி­டு­வ­தாக ஜனா­தி­பதி பகி­ரங்­க­மா­கவே வாக்­கு­று­தி­ய­ளித்­துள்ளார். ஆகவே இவ் வாக்­கு­று­தியை இன்று நடை­பெ­ற­வுள்ள தேசிய பாது­காப்பு சபைக் கூட்­டத்தில் நிறை­வேற்­று­வா­ரென நாம்   நம்­பு­கின்றோம் எனத் தெரி­வித்தார்.

காணா­ம­லாக்­கப்­பட்­டோரின் உற­வி­னர்கள் சார்பில் கலந்­து­கொண்­ட­வர்கள் கருத்துத் தெரி­விக்­கையில்,

காணா­ம­லாக்­கப்­பட்ட எமது உற­வி­னர்­களை மீட்­கக்­கோரி தொடர்ந்து வரும் இப் போராட்­டத்தில் சாத­க­மான முறையில் அமை­ய­வேண்டும் என்ற நோக்­குடன் நாங்கள் இச் சந்­திப்­பினைக் கோரி­யி­ருந்தோம். இச் சந்­திப்பில் மக­ஜ­ரினை நாம் கைய­ளித்தோம். 

அக்­கோ­ரிக்­கைக்கு அமை­வாக இது தொடர்­பாக  நட­வ­டிக்கை எடுப்­ப­தாக ஜனா­தி­பதி உறு­தி­ய­ளித்தார். குறிப்­பாக இன்று நடை­பெ­ற­வுள்ள தேசிய பாது­காப்பு சபைக் கூட்­டத்தில் பெயர்­வி­ப­ரங்­களை வெ ளியி­டக்­கோரி கட்­ட­ளை­யி­டுவேன் என உறு­தி­ய­ளித்­தி­ருந்தார்.

காணா­ம­லாக்­கப்­பட்ட உறவினர்களின் பெயர்ப்பட்டியலை வெ ளியிடவேண்டும். சிறைச்சாலைகள் மற்றும் மறைமுக தடுப்பு முகாம்களையும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களையும் நாங்கள் சென்று பார்வையிட வேண்டும். அனைத்து தமிழ் அரசியல் கைதிகள்இ தடுத்துவைக்கப்பட்டுள்ள உறவினர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையை நாம் முன்வைத்தோம். 

எமது இந்தக் கோரிக்கைள் தொடர்பில் முழுமையான நடவடிக்கை இடம்பெறும்வரை எமது கவனயீர்ப்புப்போராட்டம் தொடரும். மேலும் மேலும் இழுத்தடிப்புச்செய்யப்பட்டு நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படாது விட்டால் நாம் எமது போராட்ட வடிவத்தை மாற்றி மாறுபட்ட போராட்டத்தை முன்னெடுப்போம் எனத் தெரிவித்தனர்.