முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்கு தீ வைத்த சம்பவங்களுடன் கலகொட அத்தே ஞானசார தேரரின் தொடர்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு சிவில் சமூக பிரதி நிதிகள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை அறிவுறுத்தியுள்ளனர். 

Image result for ஞானசார தேரரின் தொடர்பு

தாரிக் மஹ்மூத் தலைமையிலான ஏழு பேர் கொண்ட முஸ்லிம் பிரதிநிதிகளும் கலாநிதி சரத் விஜேசூரிய, காமினி வெயங் கொட, தம்பர அமில தேரர் உள்ளிட்ட 7 சிங்கள சிவில் சமூக பிரதி நிதிகளும் ஒன்றாக கலந்துரையாடிய பின்னர் நேற்று முன் தினம் மாலை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை பொலிஸ் தலைமைய கத்தில் சந்தித்த போது இதனை வலி யுறுத்தியுள்ளனர். 

அத்துடன் இனவாதம், மதவாதத்தை தூண்டும் எவராக இருப்பினும் அவர்களுக்கு எதிராக உடன் நடவடிக்கை எடுக்குமாறும் இதன் போது சிவில் சமூக பிரதி நிதிகள் கூட்டாக கோரிக்கை முன்வைத்தனர்.

நேற்று முன் தினம் கொழும்பில் சிங்கள, முஸ்லிம் சிவில்  சமூகப் பிரதி நிதிகள் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் பொலிஸ் மா அதிபரை அவர்கள் நேரடியாக சந்தித்தனர். இதன் போது பொலிஸ் மா அதி பர் பூஜித் ஜயசுந்தரவுடன், பொலிஸ் மா அதி பரின் அலுவலக பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முன சிங்க உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.

இந்த சந்திப்பின்போது நாடளாவிய ரீதி யில் பதிவான முஸ்லிம் வெறுப்புணர்வு சம்பவங்கள் தொடர்பில் சிறப்பு அவதானம் வேண் டும் என சிவில் சமூக பிரதி நிதிகள் சுட்டிக் காட்டினர்.

சந்திப்பில்  பொலிஸ் மா அதிபரிடம் கருத்துக்களை எடுத்துரைத்த தம்பர அமில தேரர் குறிப்பிடுகையில்,

யாராக இருந்தாலும் இன, மதவாதத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை வேண்டும். சட்டம் அமுல் செய்ய தாமதமாகும் போது அதன் விளைவுகள் மேலும் மோசமடைய லாம். ஞானசார தேரருக்கு எதிராக குற்றச்சாட் டுக்கள் உள்ள நிலையில் அது தொடர்பில் உடன் விசாரணைகள் வேண்டும். விசார ணைகள் அனைவருக்கும் பொதுவானவை யாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் போது பொலிஸ் மா அதிபரிடம் கருத்துக்களை முன்வைத்துள்ள முஸ்லிம் சமூக பிரதிநிதிகள், மத, இனவாதத்தை தூண்டுவோர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்குமாறும், முஸ்லிம் சமூகத்தவர்கள் மீது அவ்வாறான குற்றச்சாட்டு இருக்குமாயின் அது தொடர்பில் தயவு தாட்சணை இன்றி விசாரணை செய்யுமாறும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.