நியாய விலையில் மக்களுக்கு மணல் கிடைக்க கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

Published By: Robert

12 Jun, 2017 | 01:13 PM
image

வீட்டுத்திட்டம் உள்ளிட்ட மக்களின் அவசியத் தேவைகளுக்கு நியாயமான விலையில் மணல் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி சமத்தும் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டச் செயலயகம் முன் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவா்கள் “நியாய விலையில் மணலைத் தா நியாய விலையில் மணல் வேண்டும் மணலுக்கு விலையா? மலைக்கு விலையா? எங்கள் மண் எங்களுக்கு இல்லையா? தருவதோ ஜந்தரை இலட்சம் மணலுக்கோ இரண்டு இலட்சம் சட்டவிரோத மணல் அகழ்வை தடு நியாய விலையில் மணலை  வழங்கு மணலுக்கு இலஞ்சமா எங்களுக்கு வஞ்சமா உள்ளுர் வளம் உள்ளுர் மக்களுக்கே முன்னுரிமை எமது மணல் எமக்கே முன்னுரிமையாக வேண்டும்” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனா்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவா்கள் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபருக்கு மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனா் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கிளிநொச்சி மாவட்டத்தில் மக்களாகிய நாம் எங்களுடைய கட்டுமானத் தேவைகளுக்கான மணலைப் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாகக் கரைச்சிப் பிரதேச மக்கள் மணலைப் பெறுவதற்காகப் பெரும் சிரமப்படுகின்றனர். இந்த நிலைமை கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடிக்கிறது. இதனால் கறுப்புச் சந்தைகளிலிருந்து மிக உயர்ந்த விலையைக் கொடுத்தே மக்கள் மணலை வாங்கிக் கொண்டிருக்கின்றனர். 

இந்த நிலையானது, சட்டவிரோத மணல் அகழ்வை ஊக்கப்படுத்துவதோடு மக்களையும் தவறான வழிமுறைக்குக் கொண்டு செல்கிறது. அத்துடன் மக்களுக்கு அதிகமான பணச் செலவையும் ஏற்படுத்துகிறது. இதனால் வீட்டுத்திட்டத்தை நிர்மாணிப்போர் வீட்டினை நிர்மாணிப்பதற்கு ஒதுக்கப்படும் நிதியில் 35 வீதமான பணத்தை மணலுக்கு மட்டும் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக வீட்டுத்திட்டத்தை முழுமைப்படுத்த முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்படுவதுடன் அவர்களைக் கடனாளிகளாகவும் மாற்றுகிறது. 

இதேவேளை இந்த மாவட்டத்திலிருந்து வெளிமாவட்டத்துக்கான மணல் தாராளமாக எடுத்துச் செல்லப்படுவதையும் நாம் காணக்கூடியதாக உள்ளது. 

இது எந்த அடிப்படையில் நடக்கிறது? என்று கேட்கிறோம். அத்துடன் தினமும் கிளிநொச்சி நீதிமன்றுக்கு முன்பாக சட்டவிரோதமாக அகழப்பட்ட மணலுடன் நிறைய வாகனங்கள் வரிசையில் நிறுத்தப்படுவதையும் காண்கிறோம். இவ்வாறு சட்ட விரோதமாக மணல் அகழப்படுவதால் எமது பிரதேசத்தின் நிலவளமான இயற்கை வளம் சிதைக்கப்படுகிறது. ஆகவே எமது வளத்தை நாம் இழந்து கொண்டிருக்கிறோமே தவிர எமது நியாயமான அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. இது குறித்து பல தடவை பல்வேறு தரப்பினரிடம் தெரிவிக்கப்பட்டபோதும் எந்த விதமான தீர்வுகளும் காணப்படவில்லை. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின்போதும் இந்த விவகாரம் பேசப்பட்டபோதும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மக்களுடைய நியாயமான தேவைகள் நிறைவு செய்யப்படவில்லை. எனவேதான் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படாமல் நீடித்துக் கொண்டிருப்பதைச் சுட்டிக் காட்டி எமது கண்டனத்தைத் தெரியப்படுத்துவதோடு கிளிநொச்சி மாவட்ட மக்களுடைய கட்டுமானத் தேவைகளுக்குரிய மணலை நியாய விலையில் கிடைப்பதற்கான வழிவகையைச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் இங்கே முன்வைக்கிறோம்.

அக்கராயன்குளம், புளோப்பளை, கிளாலி உள்ளிட்ட பல பிரதேசங்களில் இருந்து நாளாந்தம் சட்டவிரோதமாக மணல் வெளி மாவட்டங்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. எனவே அவற்றையும் தடுத்து நிறுத்தி மிகக் குறுகிய கால இடைவெளியில் மக்களுக்கு நியாய விலையில் மணலைக் கிடைக்கச் செய்வதற்கான நிர்வாகப் பொறிமுறையை உருவாக்கி அமுல்படுத்த வேண்டும் என்பதையும் இங்கே வலியுறுத்துகிறோம். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில்  சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் முருகேசு சந்திரகுமார் மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50