தவ­றாக முந்திச் செல்லும் வாகன சார­திகள் கவனம்; இன்று முதல் விசேட நட­வ­டிக்கை

Published By: Raam

12 Jun, 2017 | 10:43 AM
image

பாதை ஒழுங்­கு­களை கவ­னத்தில் கொள்­ளாது, ஒழுங்கு விதி­மு­றை­களை மீறி வாக னம் செலுத்தும் சார­தி­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்க இன்று முதல் விசேட நட­வ­டிக்­கை­களை நடைமுறைப்­ப­டுத்­து­வ­தாக கொழும்பு நகர போக்­கு­வ­ரத்து கட்­டுப்­பாட்டுப் பிரிவின் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்சகர் சுமித் நிசங்க தெரி­வித்தார்.

கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் இந்த சட்ட நடைமுறையை கண்­டிப்­பான முறையில் அமுல் செய்­வதை உறு­திப்­ப­டுத்த இந்த விசேட திட்டம் அமுல் செய்­யப்படு­வ­தா­கவும், பாதை ஒழுங்கு, விதிமுறை­களை மீறு­வோ­ருக்கு எதி­ராக மட்டும் சட்ட நட­வ­டிக்கை எடுக்க விசேட குழு­வி­னரை கட­மையில் ஈடு­ப­டுத்­து­வ­தா­கவும், இதற்கு மேல­தி­க­மாக 600 பொலிஸ் மோட்டார் சைக்­கிள்கள் மற்றும் சி.சி.ரி.வி காணொ­ளி­களின் உத­வி­யையும் பெற்­றுக்­கொள்ள உள்­ள­தாகவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று இடம்­பெற்ற விசேட செய்­தி­யாளர் சந்­திப்­பி­லேயே அவர் இதனைத் தெரி­வித் தார்.

குறிப்­பாக கொழும்­புக்குள் உள் நுழை யும், கண்டி, கொழும்பு பிர­தான வீதி, பேஸ்லைன் வீதி, ஹைலெவல் வீதி, ராஜ­கி­ரிய முதல் பொரளை வரை­­யி­லான வீதி, ராஜ­கி­ரிய முதல் பத்­த­ர­முல்லை வரை­யி­லான பகுதி, காலி வீதியின் பம்­ப­ல­ப்பிட்டி பகுதி, பஞ்­சி­கா­வத்தை சுற்­றுவட்டம் முதல் ஆமர் வீதி வரை­யி­லான பகுதி, ஆமர் வீதி சந்தி முதல் பேலி­ய­கொடை வரை­யி­லான பகுதி   உள்­ளிட்ட இடங்­களில் இந் நட­வடிக்கை தீவி­ர­மாக அமுல் செய்­யப்­ப­ட­வுள்­ள­தாக அவர் சுட்­டிக்­காட்­டினார்.

1951 ஆம் ஆண்டின் மோட்டார் வாகன சட்­டத்தின் 148 ஆவது அத்­தி­யா­யத்தின் 1 முதல் 5 வரை­யி­லான உப அத்­தி­யா­யங்கள் ஊடாக பாதை ஒழுங்கு முறை­மைகள் குறித்து கூறப்­பட்­டுள்ள நிலையில் அதனை மீறுவோ­ருக்கு எதி­ரா­கவே  தண்டம் அல்­லது நீதிமன்ற நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக பொலிஸ் அத்­தி­யட்சகர் சுமித் நிசங்க சுட்­டிக்­காட்­டினார்.

குறிப்­பாக சமிக்ஞை விளக்­குகள் உள்ள பகு­தி­களில் பல ஒழுங்­கைகள் உள்ள போது ஏனைய வாகனங்­க­ளுக்கும் இடை­யூறு ஏற்­ப­டுத்தும் வண்ணம் இடது புறத்தால் முந்திச் செல்லல், பின்னால் வந்து சமிக்ஞை விளக்­கு­களின் சமிக்­ஞைக்­காக காத்­தி­ருக்கும் வாகனங்­களை முந்­திக்­கொண்டு பய­ணித்தல், தெளி­வான இடம் இன்றி முந்திச் செல்லல், அபா­ய­க­ர­மாக முந்திச் செல்லல் உள்­ளிட்­டவை தொடர்பில் இன்று முதல் விசேட நட­வ­டிக்­கை எடுக்­கப்­ப­ட­வுள்­ளது.

போக்­கு­வ­ரத்துத்துறை சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நத்­தன முன­சிங்க, பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா ஆகி­யோரின் நேரடி கட்­டுப்­பாட்டில் பொலிஸ் அத்­தி­யட்சகர் சுமித் நிசங்க, உதவி பொலிஸ் அத்­தி­யட்சகர் தனஞ்­ஜய உள்­ளிட்­டோரின் மேற்­பார்­வையில் இந்த நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன.

குறிப்­பாக பாதை­களில் நெரிசல் உள்ள போது முச்­சக்­கர வண்டிச் சார­தி­களும் மோட்டார் சைக்கிள் செலுத்­து­னர்­களும் அபாயகரமான முறையில் பயணிப்பது அவதானிக்கப்பட்டுள்ள நிலையில், பாதையில் செல்லும் ஏனைய வாகனங் களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் பயணிக்கும் அனைத்து சாரதிகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் அத்தியட்சகர் சுமித் நிசங்க தெரி வித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைபொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:18:08
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56