இலங்கை தொடர்­பான அறிக்கை : ஜெனீ­வாவில் நாளை விவாதம்

Published By: Robert

11 Jun, 2017 | 11:06 AM
image

ஜெனீ­வாவில் நடந்து வரும் ஐ.நா. மனித உரி­மைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்­பான அறிக்கை நாளை திங்­கட்­கி­ழமை விவா­திக்­கப்­ப­ட­வுள்­ளது. நீதி­ப­திகள் மற்றும் சட்­டத்­த­ர­ணி­களின் சுதந்­திரம் தொடர்­பான ஐ.நா .சிறப்பு அறிக்­கை­யாளர் மொனிக்கா பின்­டோவின் இலங்கை விஜயம் தொடர்­பான அறிக்­கையே இவ்­வாறு விவா­தத்­திற்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட உள்­ளது. 

இதன் போது இலங்­கையின் நீதிக் கட்­ட­மைப்பு, மறு­சீ­ர­மைப்பு குறித்து பரிந்­து­ரைகள் முன் வைக்­கப்­படும் சாத்­தி­யக்­கூ­றுகள் காணப்­ப­டு­கின்­றன. ஏற்­க­னவே பொறுப்­புக்­கூறல் மற்றும் உண்­மை­களைக் கண்­ட­றிதல் போன்ற விவ­கா­ரங்­களில் அர­சாங்­கத்தின் உறு­தி­மொ­ழிகள் தேசிய நீதி கட்­ட­மைப்பின் முன் சவா­லுக்கு உட்­பட்­டது. எனவே இந்த விடயம் தொடர்­பிலும் கவ­னத்தில் கொள்­ளப்­பட உள்­ளது. 

மேலும் தற்­போ­தைய நிலை­மைகள் குறித்தும் விவா­தத்தின் போது உறுப்பு நாடு­களின் பிர­தி­நி­தி­க­ளினால் கேள்­விகள் எழுப்­பப்­ப­டலாம் எனக் கூறப்­ப­டு­கின்­றது.  குறிப்­பாக அண்­மைக்­கா­ல­மாக மேலோங்­கி­யுள்ள சிறு­பான்மை மக்­களின் மத ஸ்தலங்கள் மீதான தாக்­கு­தல்கள் மற்றும் சொத்­துக்­களை அழித்தல் போன்ற விவ­கா­ரங்கள் குறித்தும் கேள்­விகள் எழுப்­பப்­ப­டலாம் என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

நீதி­ப­திகள் மற்றும் சட்­டத்­த­ர­ணி­களின் சுதந்­திரம் தொடர்­பான ஐ.நா. சிறப்பு அறிக்­கை­யாளர் மொனிக்கா பின்டோ கடந்த  வருடம் ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்­த­துடன் அவர் மே மாதம் 7 ஆம் திகதி வரை  இங்கு தங்­கி­யி­ருந்து பல தரப்­பி­னரை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தார். இந்த விஜ­யத்தில் சித்­தி­ர­வ­தைகள் தொடர்­பான ஐ. நா .சிறப்பு அறிக்­கை­யாளர் ஜுவான் மென்­டசும் கலந்து கொண்­டி­ருந்தார். 

குறிப்­பாக வடக்­குக்கு விஜயம் செய்­தி­ருந்த ஐ.நா. சிறப்பு அறிக்­கை­யாளர் மொனிக்கா பின்டோ  அங்கு சிவில் சமூ­கத்­தி­ன­ரையும் மக்கள் பிர­தி­நி­தி­க­ளையும் சந்­தித்து முக்­கிய விட­யங்கள் குறித்து கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தார். இவ்­வாறு கலந்­து­ரை­யா­டப்­பட்ட விட­யங்கள் மற்றும் கண்­ட­றிந்­தவை குறித்த அறிக்­கையில் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளது.

இந்த விட­யங்­களே நாளைய தினம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன. மேலும் அறிக்கையை நீதிபதிகள் மற்றும் சட்டதரணிகளின் சுதந்திரம் தொடர்பான தற்போதைய ஐ.நா .சிறப்பு அறிக்கையாளர் டியேகோ கார்சியா சயனிடம் சமர்ப்பிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08