பிலியந்தலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : மற்றுமொருவர் கைது

Published By: Robert

11 Jun, 2017 | 10:57 AM
image

பிலியந்தலையில் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தூப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு நபரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கெக்கிராவ பஸ்தரிப்பு நிலையத்திற்கு அருகில் வைத்து இவர் கைதாகியுள்ளதாகவும் சந்தேகநபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளைக் கொள்வனவு செய்த நபரே இவ்வாறு கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

மேலும் 49 வயதான இந்த நபர் ரம்புக்கனை பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் இன்று கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

கடந்த மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸ் அதிகாரியொருவரும் 11 வயதான சிறுமியொருவரும் உயிரிழந்ததுடன் மேலும் இரு பொலிஸ் அதிகாரிகள், இளைஞரொருவர் மற்றும் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு பிள்ளைகள் காயமடைந்திருந்தனர்.

இந் நிலையில் காயமடைந்த இரு பிள்ளைகளில் ஒருவரான 11 வயதுடைய சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்னி உயிரிழந்ததை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47