ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் நோர்வூட் தியசிரிகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்து நாவலபிட்டி மாவட்ட  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ஹட்டன் பகுதியிலிருந்து நோர்வூட் நோக்கிச் சென்ற கெப்ரக வாகனமே இன்று மாலை 3.30 மணியளவில்  சுமார் 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. 

விபத்தில் காயமுற்ற சாரதி மற்றும் வாகனத்தில் பயணித்த மற்றுமொரு நபரும் படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நாவலபிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்

அதிக வேகமே விபத்துக்கான காரணம் எனவும்  விபத்தினால்  வீடு ஒன்று சேதமாகியுள்ளதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.