தலவாக்கலை டயகம பிரதான பாதையின் நாகசேன பகுதியில் கனரக வாகனமொன்று பாதையில் தாழிறங்கியுள்ளதால் குறித்த பகுதிக்கான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். 

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேனை 3ஆ ம் கட்டை பகுதியில் இன்று காலை 8 மணியளவில் 28 ஆயிரம் மெட்ரிக்டொன் எடையுடைய   கனரக வாகனம் ஒன்றே தாழிறங்கியுள்ளது 

டயகம பிரதேசத்திலுள்ள கால்நடை வளர்ப்பு பண்ணைக்கு புல் ஏற்றிச்சென்ற வாகனமே இவ்வாறு தாழிறங்கியுள்ளதாகவும்  போக்குவரத்து தடைப்பட்டுள்ள நிலையில் வாகன சாரதிகள் தேயிலை ஆராய்ச்சி நிலைய பாதை அல்லது நானுஓயா மெரேயா பாதையை பயன்படுத்துமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.