அண்மையில் புதிதாக அமைச்சுப்பதவிகள் கொடுக்கப்பட்ட நிதி, ஊடகம், வெளிவிவகாரம், காணி மற்றும் அபிவிருத்திப் பணி பொறுப்புகள் ஆகிய நான்கு அமைச்சுகளுக்குரிய விடயதானங்கள் தொடர்பான வர்த்தமானிய அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தலின்படி  தேசிய லொத்தர் சபை, அபிவிருத்தி லொத்தர் சபை உள்ளிட்ட  5 நிறுவனங்கள் வெளிவிவகார அமைச்சின் கீழும் பொதுத் திறைச்சேரி, தேசிய இறைவரித்திணைக்களம், இலங்கை சுங்கம், கலால் திணைக்களம், காப்புறுதி வாரியம் உள்ளிட்ட 33 நிறுவனங்கள் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கீழும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காணி சீர்திருத்த ஆணைக்குழு மற்றும் நில அளவைத் திணைக்களம், கந்தளாய் சீனி நிறுவனம் உள்ளிட்ட 8 நிறுவனங்கள் காணி மற்றும் பாராளுமன்ற சீர்திருத்த அமைச்சின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவைளை, ஊழியர் நம்பிக்கை நிதியம் உள்ளிட்ட 3 நிறுவனங்கள் அபிவிருத்திப் பணி பொறுப்புக்கள் அமைச்சின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.