ஜனாதிபதி கிண்ண றக்பி தொடர் ; சுகததாச விளையாட்டரங்கில் இன்று ஆரம்பம்

Published By: Priyatharshan

09 Jun, 2017 | 10:22 AM
image

மைலோ ஜனாதிபதிக் கிண்ண றக்பி நொக் அவுட் சுற்றுத் தொடர் இன்று ஆரம்­ப­மா­கின்­றது. 

7 பாட­சாலை அணிகள் மோதும் இந்தத் தொடரின் முதல் போட்­டியில் கொழும்பு உவெஸ்லிக் கல்­லூ­ரி­யுடன் சென். ஜோசப்ஸ் கல்­லூரி அணி மோது­கின்­றது.

இம்­முறை அனைத்து நொக் அவுட் போட்­டி­களும் கொழும்பு சுக­த­தாச விளை­யாட்­ட­ரங்­கில் நடை­பெ­ற­வுள்ளன. இதன் இறுதிப் போட்டி மட்டும் கொழும்பு குதிரைப் பந்­தயத்திடலில் எதிர்­வரும் 24 ஆம் திகதி மின்­னொ­ளியில் நடை­பெ­ற­வுள்­ளது. 

1993 ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்ட இந்த மைலோ ஜனா­தி­பதிக் கிண்­ணத்­துக்­கான நொக் அவுட் போட்­டி­க­ளா­னது, பாட­சா­லைகள் றக்பி லீக் போட்­டிகள் மட்­டத்தில் முத­லிடம் பெறும் எட்டு அணி­களின் பங்­கு­பற்­று­த­லோடு, சிறந்த அணியை தெரிவு செய்யும் இறுதிக் கட்ட போட்டித் தொட­ராக காணப்­ப­டு­கின்­றது.

அந்த வகையில் இந்த வரு­டத்­துக்­கான போட்­டிகள் இன்று, காலி­றுதிப் போட்­டி­க­ளுடன் ஆரம்­ப­மாக உள்­ளன. இரண்டு வாரங்­க­ளுக்கு இப்­போட்­டிகள் நடை­பெ­ற­வுள்­ளன. 

இந்தத் தொட­ரி­லி­ருந்து கொழும்பு ரோயல் கல்­லூரி வில­கி­யுள்ள நிலையில், உவெஸ்லிக் கல்­லூரி, சென்.ஜோசப் கல்­லூரி, ட்ரினிட்டி கல்­லூரி, சென்.பீட்டர்ஸ் கல்­லூரி, இசி­பத்­தன கல்­லூரி, கண்டி சென்.அந்­தனிஸ் மற்றும் கண்டி தர்­ம­ராஜா கல்­லூரி ஆகி­யவை மோது­கின்­றன.

கொழும்பு ரோயல் கல்­லூரி போட்­டி­யி­லி­ருந்து வில­கி­யுள்­ளதால், காலி­றுதிப் போட்­டியில் ரோயல் கல்­லூ­ரி­யுடன் மோத­வி­ருந்த தர்­ம­ராஜ கல்­லூரி, எவ்­விதப் போட்­டி­யு­மின்றி அரை­யி­று­திக்கு தகுதி பெற்­றுள்­ளது.

அதே­நேரம் போட்­டிக்கு அனு­ச­ரணை வழங்கும் இலங்கை மைலோ நிறு­வனம், ஜனா­தி­பதி கிண்­ணத்­துக்­கான போட்­டி­களை வலுப்­ப­டுத்தும் பங்­கு­தா­ர­ராக தொடர்ச்­சி­யாக 25 வரு­டங்­களைப் பூர்த்தி செய்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதுகுறித்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது 25 வருட பூர்த்தியை முன்னிட்டு கல்விஅமைச்சரின் பங்குபற்றலுடன் கேக் வெட்டி கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35