“வெள்­ளத்­தாலும் நிலச்­ச­ரி­வாலும் பாதிக்­கப்­பட்ட  இலங்கை மக்­க­ளுக்­கான மனி­தா­பி­மானச் செயற்­பா­டு­க­ளுக்கு நோர்வே 10 மில்­லியன் நோர்­வே­ஜியன் குரோ­னர்­களை (இலங்கை மதிப்பில் 180 மில்­லியன் இலங்கை ரூபாய்கள்) வழங்­கு­கி­றது” என நோர்­வேயின் வெளி­யு­றவு அமைச்சர் பர்கே பிரெண்டே அறி­வித்­துள்ளார்.

இவ்­வு­த­வி­யா­னது ஐக்­கிய நாடுகள் சிறுவர் நிதியம்  மற்றும் சர்­வ­தேச செஞ்­சி­லுவைச் சங்கம் ஆகி­ய­வற்றின் ஊடாகச் செயற்­ப­டுத்­தப்­படும். 

இயற்கை அனர்த்­தங்­க­ளாலும் பரு­வ­நிலை மாற்­றங்­க­ளாலும் ஏற்­படும் அழி­வு­களைத் தடுக்­கவும் அதி­லி­ருந்து தற்­காத்துக் கொள்­வ­தற்­கு­மான நீண்­ட­கால நோக்கின் தேவையை வெளி­யு­றவு அமைச்சர் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.  அத்­துடன்   'மட்­டுப்­ப­டுத்தல் செயன்­மு­றை­யா­னது நஷ்­ட­ஈட்டை வழங்­கு­வ­தை­விடப் பய­னுள்­ள­தென்­ப­தோடு மனித உயிர்­க­ளையும் காக்­க­வல்­லது" எனவும்  பர்கே பிரெண்டே குறிப்­பிட்டார். 

ஐக்­கிய நாடுகள் சிறுவர் நிதியம் வெள்­ளத்­தாலும் நிலச்­ச­ரி­வாலும் பாதிக்­கப்­பட்ட  சிறு­வர்கள், பெண்கள் மற்றும் அவர்­க­ளது  குடும்­பங்­க­ளுக்கு உத­வு­கி­றது. அவ்­வ­கையில் நோர்­வே­ஜிய உத­வி­யா­னது இக்­கு­டும்­பங்­க­ளுக்­கான நீர்இ சுகா­தாரம், தூய்மை, சிறுவர் பாது­காப்பு, கல்வி ஆகி­ய­வற்றில் கவனம் குவிகி­றது. 

மேலும் சர்­வ­தேச செஞ்­சி­லுவைச் சங்­கத்­திற்­கான உத­வி­யி­னூ­டாக நீர் மற்றும் சுகா­தா­ரத்தை மேம்­ப­டுத்தும் சேக­ரிப்பு நிலை­யங்­களின் தரத்தை அதி­க­ரித்தல், கிண­று­களைச் சுத்தம் செய்தல், பாதிக்­கப்­பட்ட மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்­கையை மீளத் தொடங்­கு­வ­தற்­கான  அடிப்­ப­டை­யான வாழ்­வா­தார வச­தி­களை வழங்­குதல் ஆகி­யன இடம்­பெ­ற­வுள்­ளன.

கொழும்பில் உள்ள நோர்வே  தூத­ர­க­மா­னது தேசிய கட்­டட ஆராய்ச்சி அமைப்பு மற்றும் நோர்­வே­ஜிய நில­வியல் தொழில்­நுட்ப நிறு­வனம் ஆகி­ய­வற்­றுக்­கி­டை­யே­யான தொழி­ல்நுட்ப ஒத்­து­ழைப்­புக்கு நிதி­யு­தவி அளிக்­கி­றது. 

இதன் மூலம் தேசிய கட்­டட ஆராய்ச்சி அமைப்பின் திறன் மேம்பாடு, அவ்வமைப்புக்கு நிலச்சரிவை தடுக்க உதவும் மேன்மையான தொழில்நுட்ப உபகரணங்களை வழங்குவதோடு முன் னெச்சரிக்கையையும் நிலச்சரிவைச் தடுக்கும் வழிகளை அறியும் திறனும் மேம்படுத் தப்படும்.