பிலியந்தலையில் கடந்த மாதம் இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோக சம்பவத்திற்கு நிதியுதவி வழங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் இருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்கள் 27 மற்றும் 34 வயதுடையவர்களெனவும் தர்கா நகரில் வைத்தே குறித்த இருவரையும் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பிலியந்தலையில் கடந்த மே மாதம் 9 ஆம் திகதி போதைப்பொருள் சுற்றிவளைப்­பொன்­றுக்குச் சென்ற பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் சிறப்பு விசா­ர­ணை­யாளர் பொலிஸ் பரி­சோ­தகர் ரங்­க­ஜீவ தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வினர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்­பாக்கிப் பிர­யோ­கத்தில் பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் உட்பட இருவர் உயிரிழந்த நிலையில் 4 பேர் காயமடைந்திருந்தனர். 

இதேவேளை, இச் சம்பவத்துடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்கள் ஏற்கனவே பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.