(ஆர்.யசி)

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை இந்த வாரத்துடன் மாற்றம் அடையும் எனவும்  தற்போதைய நிலையில் இலங்கையில் சூறாவளியோ அல்லது சுனாமி அவதானமோ இலங்கைக்கு  இல்லை என காலநிலை  அவதான மத்திய நிலையம்  குறிப்பிட்டுள்ளது. 

வானிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

கடந்த இரண்டு வார காலமாக நாட்டில் நிலவிவரும் அசாதாரண  காலநிலையினால் காரணமாக பல அனர்த்தங்கள் ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த காலநிலை மாற்றம் அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.