லாக்டோஸ் இன்டாலரன்ஸிற்குரிய நிவாரணம்

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி எதற்கு பொருந்துமோ பொருந்தாதோ ஆனால் எம்முடைய உடலில் இருக்கவேண்டிய கால்சியம் என்ற சத்திற்கு இந்தபழமொழி பொருந்தும். இப்படி அவசியமான கால்சியம் சத்து பாலில்அதிகளவில் உள்ளது.

ஆனால் ஒரு சிலருக்கு இந்த பால் ஒவ்வாமையை ஏற்படுத்துவதாக அமைந்துவிடுகிறது. அதாவது பாலில் இருக்கும் லாக்டோஸ் என்ற மூலப்பொருள் இவர்களுக்கு செரிமான பிரச்சனைகளையும், அலர்ஜி எனப்படும் ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும். இதனை மருத்துவத்துறையினர் லாக்டோஸ் இன்டாலரன்ஸ் என்று குறிப்பிடுகிறார்கள்.

இவர்கள் பொதுவாக வயிற்று உப்புசம், வாய்வுத் தொல்லை,வாந்தி, வயிற்றுப்போக்கு, கடுமையான வயிற்று வலி போன்றவற்றிற்கு ஆளாக நேரிடும். அதிகளவு கால்சியம் சத்துள்ள பாலை இவர்களால் உணவாக எடுத்துக் கொள்ள முடியாது. இதற்கு மாற்றாக லாக்டோஸ் குறைவான தயிர், சோயாவிலிருந்து தயாரிக்கப்பட்ட பால், பச்சை கீரை போன்றஉணவுப்பொருள்களை இவர்கள் எடுத்துக் கொள்வதன் மூலம் இவர்கள் தங்களுக்கான கால்சிய சத்து குறைபாடு வராமல் தற்காத்துக் கொள்ளலாம்.

Dr. பத்மா

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்