இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 60வது பேராளர் மாநாடு எதிர்வரும் ஜுன் 30 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு கொழும்பு றோயல் கல்லூரி புதிய மண்டபத்தில் நடைபெறுவதற்கான ஒழுங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

பாடசாலையில் கல்வி கற்பிப்பதுடன் அதிபர், ஆசிரியர்களின் கடமை முடிந்துவிடுவதில்லை கல்வி கொள்கையில் மேற்கொள்ளவேண்டிய மாற்றங்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் சமகாலத்தில் நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராய்ந்து பிரேரணை முன்வைத்து மலையக கல்வியிலும் நாட்டின் அபிவிருத்தியிலும் பங்குபற்றும் உரிமையை பயன்படுத்தமுடியும். 

அதேநேரம்  கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டு உதவுவதுடன் பங்குபற்ற விரும்புகின்ற அதிபர், ஆசிரியர்கள் 0773676668 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளமுடியும். 

இதேவேளை, ஒரு நாள் கடமை விடுமுறையும் புகையிரத பயண பத்திரத்தையும் பெற உரித்துடையவர்களாகிய உங்களின் இந்த உரிமையை மறுப்பதற்கு அதிபருக்கோ, வேறு அதிகாரிக்கோ உரிமையில்லை தாபனகோவை xxv-2-1 பிரிவு உறுதிபடுத்துகின்றது.