சம்­பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் நியூ­ஸி­லாந்­துக்கு எதி­ரான நேற்­றைய போட்­டியில்  87 ஓட்­டங்­களால் இங்­கி­லாந்து அணி வெற்­றி­பெற்­றது.

கார்டிப் மைதா­னத்தில் நேற்று நடை­பெற்ற போட்­டியில் ஏ பிரிவில் உள்ள இங்­கி­லாந்து மற்றும் நியூஸி­லாந்து அணிகள் மோதின. இந்தப் போட்­டியில் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்ற நியூ­ஸி­லாந்து, இங்­கி­லாந்து அணியை முதலில் துடுப்­பெ­டுத்­தாட அழைத்­தது.

அதன்­படி இங்­கி­லாந்தின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளாக ஜேசன் ரோய், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் கள­மி­றங்­கினர். இந்த ஜோடி 37 ஓட்­டங்கள் எடுத்­தி­ருந்த நிலையில் ரோய் (13) போல் ­டாகி வெளி­யே­றினார். அதன்­பின்னர் ஹேல்ஸ்இ ரூட் ஜோடி சிறப்­பான ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்­தி­யதால் அணியின் ஓட்ட எண்­ணிக்கை உயர்ந்­தது. 

இந்­நி­லையில் ஹேல்ஸ் 56 ஓட்­டங்கள் எடுத்த நிலையில், மில்னே பந்தில் போல்­டானார். தலைவர் மோர்கன் 13 ஓட்­டங்­களை மட்­டுமே சேர்த்து ஏமாற்­ற­ம­ளித்தார். சிறப்­பாக ஆடிய ஜோ ரூட், 64 ஓட்­டங்­க­ளையும், பென் ஸ்டோக்ஸ் 48 ஓட்­டங்­க­ளையும் சேர்த்து பெவி­லியன் திரும்­பினர். அப்­போது அணியின் ஓட்ட எண்­ணிக்கை 210 ஓட்­டங்கள் என்ற நிலையில் இருந்­தது. 

அதன்­பின்னர் சீரான இடை­வெ­ளியில் விக்­கெட்­டுகள் சரிந்­தன. பட்லர் மட்டும் நிலைத்து நின்று அரை சதம் கடந்தார். இதனால், 49.3 ஓவர்­களில் இங்­கி­லாந்து 310 ஓட்­டங்­க­ளுக்கு சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்­தது. பட்லர் 61 ஓட்­டங்­க­ளுடன் களத்தில் இருந்தார். 

இதை­ய­டுத்து 311 ஓட்­டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்­குடன் நியூ­ஸி­லாந்து அணியின் குப்தில் மற்றும் ரொஞ்சி ஆகியோர் கள­மி­றங்­கினர். இதில் ரொஞ்சி தான் எதிர்­கொண்ட முத­லா­வது பந்­தி­லேயே போல்­டாகி ஆட்­ட­மி­ழக்க மறு­மு­னையில் நின்ற குப்தில் 27 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்டார்.

அணித் தலைவர் வில்­லி­யம்சன் பொறுப்­பாக ஆடி 87 ஓட்­டங்­க­ளையும், அனு­பவ வீரர் ரோஸ் டெய்லர் 39 ஓட்­டங்­க­ளையும் பெற்­றனர். ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்­டங்­க­ளுடன் ஆட்டமிழக்க 44.3 ஓவர்களில் 223 ஓட்டங்களைப் பெற்று அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 87 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவிக்கொண்டது.