பாரிஸில் நடை­பெற்றுவரும் கிராண்ட்ஸ்லாம் அந்­தஸ்து பெற்ற பிரெஞ்ச் பகி­ரங்க டென்னிஸ் தொடரில் ஆன்டி முர்ரே, சிமோனா ஹாலெப் ஆகியோர் காலி­று­திக்கு முன்­னே­றி­யுள்­ளனர்.

இதில் நேற்று ஆண்கள் பிரிவில் நடந்த 4 ஆவது சுற் றில் ஒலிம்பிக் சம்­பி­யனும், முதல்­தர வீர­ரு­மான முர்ரே (இங்­கி­லாந்து) 6–-3, 6–-4, 6–-3 என்ற நேர் செட்களில் காரென் காச்­ச­னோவை (ரஷ்யா) வீழ்த்தி காலி­று­திக்கு முன்­னே­றினார்.

பெண்கள் ஒற்­றையர் பிரிவில் 4-ஆம் நிலை வீராங்­கனை சிமோனா ஹாலெப் 6-–1, 6–-1 என்ற நேர் செட்களில் சுவாரஸ் நவ­ரோவை (ஸ்பெய்ன்) வெளி­யேற்றி காலிறுதியை எட்டினார்.