அக்குரஸ்ஸ திப்பொட்டுவாவ பகுதியில் 15 அடி நீளமான முதலையொன்று பிரதேசவாசிகளின் உதவியுடன் வனவிலங்கு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டுள்ளது.

தேயிலைத் தோட்;டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் ஒருவரின் காலில் சந்தேகத்திற்கிடமான வகையில் பொருள் இடிபடுவதாக உணர்ந்து பார்த்த போது இராட்சத முதலையொன்று இருப்பதை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறி பிரதேசமக்களிடம் தெரிவித்ததையடுத்து குறித்த முதலை பிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் இரண்டு மணித்தியால போராட்டத்திற்கு பின்னர் குறித்த முதலை பிடிக்கப்பட்டுள்ளது.

 

<div style="position:relative;height:0;padding-bottom:75.0%"><iframe src="https://www.youtube.com/embed/3g_IMUmzXu0?rel=0&amp;controls=0&amp;showinfo=0?ecver=2" width="480" height="360" frameborder="0" style="position:absolute;width:100%;height:100%;left:0" allowfullscreen></iframe></div>