நுவரெலியா கல்வி வலயம், ஹோல்புறூக் தமிழ் மஹா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் அனைவருக்குமான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இதுவரை காலமும் பாடசாலையில் கல்வி கற்று வெளியேறிய அனைத்து பழைய மாணவர்களுக்கும் பாடசாலையின் எதிர்கால நலத்திட்டங்களோடு கை கோர்த்து பயணிப்பதற்கான நல்லதொரு முன்னெடுப்பாக, 2017ம் ஆண்டுக்கான முதலாவது பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் பாடசாலை அதிபரின் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இடம்பெறவிருந்த மேற்படி கூட்டம் தவிர்க்கமுடியாத காரணத்தினால் எதிர்வரும் 11/6/2017 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணிக்கு நடைப்பெறவிருக்கின்றது.

இந்நிகழ்வுக்கு பாடசாலையின் அனைத்து பழைய மாணவ மாணவிகளுக்கும்  அதிபர், பழைய மாணவர் சங்க செயலாளர், மற்றும் நிகழ்வு ஏற்பாட்டுக்குழு அழைப்பு விடுத்துள்ளனர்.