தேசிய தைப்­பொங்கல் நிகழ்வில் கலந்­து­கொண்ட பிரித்­தா­னி­யா வின் வெளி­யு­றவு அமைச்சர் ஹியூகோ ஸ்வையர் தமிழ் மொழியில் தைப்­பொங்கல் வாழ்த்­துக்­களைத் தெரி­வித்­த­துடன் அவ­ரு­டைய உரையில் இரண்டு தரு­ணங்­களில் தமிழ் மொழியை பிர­யோ­கித்தார். 

இலங்­கைக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்டு வரு­கை­தந்­துள்ள பிரித்­தா­னி­யாவின் வெளி­யு­றவு அமைச்சர் ஹியூகோ ஸ்வையர் யாழில் நேற்று நடை­பெற்ற தேசிய தைப்­பொங்கல் வைப­வத்­திலும் பங்­கேற்­றி­ருந்தார்.

இதன்­போது அவ­ருக்கு உரை­யாற்­று­மாறு அழைப்பு விடுக்­கப்­பட்­டது. இத்­த­ரு­ணத்தில் சூரி­ய­னுக்கு நன்றி செலுத்தும் முக­மா­கவே தைப்­பொங்கல் கொண்­டா­டப்­ப­டு­கின்­றது என ஆங்­கி­லத்தில் தனது உரையை ஆரம்­பித்த பிரித்­தா­னி­யாவின் வெளி­யு­றவு அமைச்சர் ஸ்வையர் உரையின் முற்­ப­கு­தியில் "தை பிறந்தால் வழி பிறக்கும்" என தமிழில் விளித்துக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து ஆங்­கில மொழியில் தனது உரையைத் தொடர்ந்­தவர் நிறைவு தரு­ணத்தில் "தைப்­பொங்கல் வாழ்த்­துக்கள்" என தமிழில் தனது வாழ்த்துக்களை தெரிவித்து விடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.