தொடர்ந்தும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை : 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை..!

Published By: Robert

06 Jun, 2017 | 10:05 AM
image

நாட்டில் தென்னிலங்கை மற்றும் மலையாக பகுதிகளில் தொடர்ந்தும் மலையுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடர்வதுடன் ஏழு மாவட்டங்களின் மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. அனர்த்தத்தில் காணமால் போன  79 பேரை தேடும் பணிகள்  தொடர்ந்த வண்ணம் உள்ளது. பாதிக்கப்பட்ட 21 ஆயிரத்து  681 பேர் தொடர்ந்தும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

Image result for 7 மாவட்டங்களின் மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக 15 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு மற்றும் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 6  இலட்சத்து 83 ஆயிரத்து 831 ஆக உள்ளதுடன் 6 ஆயிரத்து 270 குடும்பங்களை சேர்ந்த 21 ஆயிரத்து  681 பேர் தொடர்ந்தும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த அனர்த்தங்களில் சிக்குண்டு பலியானவர்களின் எண்ணிக்கை 224 ஆக உள்ள நிலையில் காணாமால் போனார்  79 பேரை தேடும் பணிகளை பாதுகாப்பு படையினர் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர். 

இதனிடையே ஏழு மாவட்டங்களுக்கான அனர்த்த எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களால் நீடிக்கப்பட்டுள்ளது.  இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, காலி, மாத்தறை, ஹம்பந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கையே இவ்வாறு தொடர்கின்றது. குறித்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் பட்சத்தில் அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய கட்டிட ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.அதேபோல் மண்சரிவு எச்சரிக்கை காரணமாக களுத்துறை - புளத்சிங்கள  திப்பொட்டாவ மலை பகுதியில் இருந்து 22 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன.

இதேவேளை மேல், சப்ரகமுவ, மத்திய வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் தொடர்ந்தும் மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது. அதேபோல் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

தென்னிலங்கையின் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் பெரும்பாலும் சாதாரண நிலைமையை அடைந்துள்ளது. பாதிக்குக்கு உள்ளான சப்ரகமுவ மாகாணத்தின் சேதமடைந்த 10 பாடசாலைகள், கிழக்கு மாகாணத்தின்  சேதமடைந்த 10 பாடசாலைகள் மற்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ள 25 பாடசாலைகளை தவிர்ந்த ஏனைய  பாடசாலைகள் அனைத்தும் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை ஹம்பாந்தோட்டை, காலி ஆகிய மாவட்டங்களின் வெள்ள நீர் வடிந்தோடியுள்ள போதிலும் ஒருசில பகுதிகளில் நான்கு அடி அளவில் நீர் தேங்கி நிற்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

அதேபோல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான மருத்துவ வசதிகளையும், முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கான நிவாரண பொருட்களையும் வழங்கும் நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் பாதுகாப்பு படையினர் தொடர்ந்தும் தமது மீட்பு மற்றும் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49