கோடையில் உடலின் வெப்பத்தைக் கட்டுப்படுத்துகிறோமோ இல்லையோ கண்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்க எண்ணுகிறோம். அதற்காக சில முயற்சிகளையும் மேற்கொள்கிறோம். அதாவது குளிர்கண்ணாடியை அணிவது, கண்களுக்கு மேல் வெள்ளரிக்காயை நறுக்கி வைத்துக் கொள்வது. இளநீர் அருந்துவது என சிலவற்றை செய்து வருகிறோம். ஆனால் தற்போது கண்கள் குளிர்ச்சியாக இருக்க விசேட சொட்டுமருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கண்களுக்கு பக்க விளைவை ஏற்படுத்தாத இந்த சொட்டு மருந்தைக் கூட குளிர்ச்சியாக இருப்பதற்காக பயன்படுத்தலாம்.

அதே போல பெண்கள் தங்களின் பிரசவ காலத்தின் போது கண்களை சற்று கூடுதல் அக்கறையுடன் கவனித்துக் கொள்ளவேண்டும். ஏனெனில் இரத்த அழுத்தம் இயல்பாக அல்லாமல் சற்று அதிகமாக உள்ள பெண்களுக்கு பேறு காலத்தின் போது கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு பார்வை குறைபாடு உண்டாகலாம். இதற்கான மருத்துவ காரணம் பல உண்டு. கண்களுக்கு செல்லும் இரத்த குழாய்களில் ஏற்படும் பாதிப்பு, கண் நரம்பு பாதிப்பு, மூளையில் எற்படும் சமச்சீரற்ற இரத்த அழுத்தம் என சிலவற்றை வகைப்படுத்தலாம். இவை முக்கியமாக கண் நரம்பை பாதிப்பதால் இதற்கு Papilledema என்று பெயர். இதற்கான நவீன லேசர் சிகிச்சை தற்போது அறிமுகமாகியிருக்கிறது. இதனை பயன்படுத்தி கண் பார்வை குறைபாட்டை சீராக்கிக் கொள்ளலாம்.

Dr. சூஸன்

தொகுப்பு அனுஷா. 

தகவல் : சென்னை அலுவலகம்