தெஹிவளை - பம்பலபிட்டிய பிரதான வீதியில் விவேகானந்த சந்திக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் பலியாகியுள்ளார்.

பாதசாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி, களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் ஹட்டன் பகுதியைச் சேர்ந்த 69 வயதான நபர் எனத் தெரியவந்துள்ளது.

இதேவேளை, விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வெல்லவத்தை பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.