"வீடுகளை அமைத்து எங்களுடைய உயிர்களை காப்பாற்று" மலையக அரசியல் தலைமைகளிடம் புலம்பும் தோட்ட மக்கள்

Published By: Robert

05 Jun, 2017 | 11:19 AM
image

நாட்டில் சில பாகங்களில் காலநிலை சீர்கேட்டின் காரணமாக அடைமழை பெய்து வருவதோடு மண்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கினால் பலர் பலியாகியுள்ளதுடன் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ள இதேவேளை தங்களுடைய சொத்துக்களையும் உடமைகளையும் உறவுகளையும் இழந்து எவ்வித அடிப்படை வசதிகள் இல்லாமல் அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.

மலையக அரசியல்வாதிகளை பொருத்தவரையில் மலையக மக்களுடைய தேவைகளை அல்லது அவர்களுடைய ஆபத்துகளை கேட்டு அறிந்து செயல்படுகின்றார்களா என அக்கரப்பத்தனை போட்மோர் தோட்ட மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அக்கரப்பத்தனை போட்மோர் தோட்டத்தில் கடந்த இரண்டு வருடமாக மண்சரிவு எச்சரிக்கையினால் இரவு நேரத்தில் நிம்மதி அற்ற நிலையில் எந்த நேரத்தில் மண்சரிவு ஆபத்து வருமோ என்ற அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இம்மக்களுக்கு மலையக அரசியல்வாதிகள் இதுவரை காலமும் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் மழை காலங்களில் மாத்திரமே வீடுகளிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு தெரிவிக்கின்றனர்.

இத்தோட்டத்தில் 18 குடும்பங்களை சேர்ந்த 91 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். 2015ம் ஆண்டு இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு 22 வீடுகள் நிர்மாணித்து தருவதாக கூறி கடந்த அரசாங்கத்தில் இருந்த அமைச்சர் ஒருவர் அடிக்கல்லையும் நாட்டி வைத்தார். அதற்கு என்ன நடந்தது கூட தெரியவில்லை. அதற்கு பின்பு நல்லாட்சி அரசாங்கம் பொறுபேற்ற பின் பொறுப்பான அமைச்சர் ஒருவரிடம் மணு வழங்கிய போதிலும் இதுவரை அவரும் கண்டுக்கொள்ளவில்லை என இங்குள்ளவர்கள் புலம்பி அழுகின்றனர்.

எனவே பாதிக்கப்பட்ட தமக்கு வெகு விரைவில் வீடுகளை அமைத்து எங்களுடைய உயிர்களை காப்பாற்றுவதற்கு மலையக அரசியல் தலைமைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம் மக்கள் கோருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08