யுவராஜ், ஷர்மா, கோலி அதிரடி : பாகிஸ்தான் அணிக்கு பலத்த அடி

Published By: Priyatharshan

05 Jun, 2017 | 10:56 AM
image

இந்­தியா - பாகிஸ்தான் அணி­க­ளுக்­கி­டையில் நடை­பெற்ற சம்­பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் போட்­டியில் இந்­திய அணி 124 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் அபார வெற்­றி­யீட்­டி­யது.

சம்­பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் ரசி­கர்கள் மிகவும் ஆவ­லுடன் எதிர்­பார்த்த இந்­தி­யா-­பா­கிஸ்தான் ஆட்டம் பர்­மிங்­காமில் உள்ள எட்ஜ்­பஸ்டன் மைதா­னத்தில் நேற்று நடை­பெற்­றது. 

இந்தப் போட்­டியில் நாணயச் சுழற்­சியில் வெற்­றி­பெற்ற பாகிஸ்தான் அணி இந்­தி­யாவை முதலில் துடுப்­பெ­டுத்­தா­டும்­படி பணித்­தது. 

அதன்­படி முதலில் கள­மி­றங்­கிய இந்­திய அணி யுவராஜ் சிங், விராட் கோலி, பாண்­டியா உள்­ளிட்­ட­வர்­களின் அதி­ர­டி­யுடன் 320 ஓட்­டங்­களைக் குவித்­தது. 

இந்­தி­யாவின் முதல் 4 ஆட்­டக்­கா­ரர்­களும் அரைச் சதம் கடந்­தது குறிப்­பி­டத்­தக்­கது. ரோஹித் ஷர்மா (91), ஷிகர் தவாண் (68), கோலி (81), யுவராஜ் சிங் 32 பந்­து­களில் 53 ஓட்­டங்கள் என பெற்­றி­ருந்­தனர். கடைசியாக ஆட வந்த பாண்­டி­யாவும் 3 சிக்­ஸர்­க­ளுடன் 6 பந்­து­களில் 20 ஓட்­டங்­களை விளாசி அசத்­தினார். 

இந்­தியா நிர்­ண­யித்த 320 ஓட்­டங்கள் என்ற இலக்கை விரட்­டிய பாகிஸ்தான் பொறு­மை­யா­கவே தனது ஆட்­டத்தை தொடங்­கி­யது. 5ஆவது ஓவர் முடியும் முன் மழை குறுக்­கிட்­டதால் ஆட்டம் தடைப்­பட்­டது. அரை மணி நேரத்­துக்கும் மேலாக ஆட்டம் மழையால் வீணா­னதால் இலக்கு 41 ஓவர்­க­ளுக்கு 289 என மாற்றப்பட்டது.

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 9ஆவது ஓவரில் ஷேஸாத்தை 12 ஓட்­டங்­க­ளுக்கு இழந்­தது. அடுத்த சில ஓவர்­க­ளி­லேயே பாபர் அஸாம் 8 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்தார்.

பின்னர் அசார் அலி, முக­மது ஹாபீஸ் இணை பொறுப்­புடன் ஆடி ஓட்­டங்­களை சேர்த்து வந்­தது. ஹாபிஸ் 64 பந்­து­களில் அரை சதம் எட்­டினார். ஆனால் அந்த ஓவ­ரி­லேயே ஜடேஜா வீசிய பந்தில் பிடி­கொ­டுத்து ஆட்­ட­மி­ழந்தார்.

மீத­மி­ருந்த 20 ஓவர்­களில் 198 ஓட்­டங்கள் தேவை என்ற நிலையில், இரு­ப­துக்கு 20 போட்­டியைப் போல ஆட வேண்­டிய நிலைக்கு பாகிஸ்தான் அணி தள்­ளப்­பட்­டது. இதை உணர்ந்து ஷோயிப் மலிக், சிக்ஸர், பவுண்­டரி என விளாச ஆரம்­பித்தார்.

ஷோயிப் மலிக் 9 பந்து களில் 15 ஓட்­டங்கள் எடுத்­தி­ருந்த போது, 24ஆவது ஓவரில், உமேஷ் யாதவ் வீசிய பந்தை சற்று தடு­மாற்­றத்­துடன் தட்­டி ­விட்டு ஓட்டம் ஒன்றை எடுக்க முயன்றார். ஆனால் மறு­மு­னை யில் இருந்த ஹாபீஸ் வர வேண் டாம் என மறுக்க, ஷோயிப் மலிக் மீண்டும் திரும்பி ஓடி எல்­லைக்குள் நுழை­வ­தற்குள் ரவீந்­திர ஜடேஜா பந்தை எடுத்து விக்­கெட்டை நோக்கி எறிந்தார்.  ரன் அவுட் ஆன ஷோயிப் மலிக் பெவி­லியன் திரும்­பினார். ஷோயிப் மலிக் ஆட்­ட­மி­ழந்­தது போட்­டியின் திருப்­பு­மு­னை­யாக அமைந்­தது. 

தொடர்ந்து சீரான இடை­வெ­ளியில் பாகிஸ்தான் வீரர்கள் ஆட்­ட­மி­ழக்க ஆரம்­பித்­தனர். 

உமேஷ் யாதவ் வீசிய 34 ஆவது ஓவரில் அடுத்தடுத்து ஆமிர், ஹஸன் அலி இருவரும் ஆட்டமிழக்க, 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. கடைசி பாகிஸ்தான் வீரர் வஹாப் ரியாஸ் உடல்நலம் சரியில்லாததால் ஆடவரவில்லை. ஆட்ட நாயகனாக யுவராஜ் சிங் தெரிவுசெய்யப்பட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31