எளிதாக்கப்பட்டிருக்கும் எலும்பு மஜ்ஜை சத்திர சிகிச்சை

Published By: Robert

04 Jun, 2017 | 02:27 PM
image

எலும்பு மஜ்ஜை என்றால் என்ன என்­பதை முதலில் தெரிந்து கொள்­ளுங்கள். பொது­வாக இரத்­தத்தில் சிவப்­ப­ணுக்கள், வெள்­ளை­ய­ணுக்கள் மற்றும் பிளேட்லெஸ் என மூன்று வகையான அணுக்கள் உள்­ளன. இதில் நாம் சுவா­சிக்கும் காற்றில் உள்ள ஓக்­ஸி­ஜனை நுரை­யீரல் மூல­மாக உட­லி­லுள்ள மற்ற பாகங்­க­ளுக்கு எடுத்துச் செல்லும் பணியை சிவப்­ப­ணுக்கள் செவ்­வனே செய்­கின்­றன. அதே தரு­ணத்தில் நாம் சுவா­சிக்கும் காற்றில் உள்ள பக்­டீ­ரி­யாக்கள் இரத்­தத்தை அடைந்­து­வி­டாமல் தடுக்கும் பணியை வெள்­ளை­ய­ணுக்கள் திறம்­பட செய்­கின்­றன. 

எம்­மு­டைய உடல்­களில் பல­வி­த­மான வெள்­ளை­ய­ணுக்கள் உள்­ளன. நோய் எதிர்ப்பு சக்­திக்­கான வேலையை செய்­வதும் வெள்­ளை­ய­ணுக்­களே. பிளேட்லெஸ் அணுக்­களின் எண்­ணிக்கை ஒரு­வ­ருக்கு இயல்பை விட குறைந்து விட்டால், உட­லி­லி­ருந்து இரத்தம் வெளி­யேறும். அதா­வது ஒரு­வ­ருக்கு அடி­பட்­ட­வுடன், அந்த இடத்தில் உள்ள இவ்­வ­கை­யான அணுக்கள் ஒன்று கூடி வெளிப்­ப­டும், இரத்­தத்தை கட்­டி­யாக்கி விடும். இந்த மூன்றின் இணைவு தான் எலும்பு மஜ்ஜை எனப்­படும். 

இந்த எலும்பு மஜ்­ஜைகள் பல­வீ­ன­ம­டைந்தால் லுகே­மியா எனப்படும் நோய் உரு­வாகும். இதுவும் புற்று நோயின் ஒரு வகையே. லிம்ஃ­போமா எனப்­படும் ஒரு வகை­யான புற்­று­நோயும் எலும்பு மஜ்ஜையின் பாதிப்பில் ஏற்­ப­டு­வதே. எலும்பு மஜ்­ஜையில் உள்ள சிவப்ப­ணுக்கள் மற்றும் வெள்­ளை­ய­ணுக்கள் செயல்­பட இரும்புச் சத்து மற்ற விற்­ற­மின்கள் தேவை. இத்­த­கைய விற்­றமின் சத்­துகள் எம்­மு­டைய உடலில் போது­மான அளவில் இல்­லை­யெனில் சிவப்­ப­ணுக்கள் மற்றும் வெள்­ளை­ய­ணுக்­களின் செயல்­பாட்டில் சமச்­சீ­ரற்ற தன்மை உரு­வாகி, பாதிப்பை ஏற்­ப­டுத்தும். அவற்றில் எப்­லாஸ்டிக் அனி­மீயா என்று குறிப்­பி­டப்­படும் மிக அரிய வகை பாதிப்பும் அடங்கும்.

பொது­வாக பிறந்த குழந்தை அனி­மீக்­காக இருந்தால், அவர்­களின் எலும்பு மஜ்­ஜையைப் பரி­சோ­தித்து, அவற்றில் ஏதேனும் குறை­பாடு இருந்தால் அதா­வது தல­சீ­மியா என்று குறிப்­பி­டப்­படும்  குறை­பாடு இருந்தால், மாற்று எலும்பு மஜ்ஜையை அந்த குழந்தையின் இரத்த தொடர்புடையவரிடமிருந்து பெற்று சத்திர சிகிச்சை செய்து, அந்த குழந்தையை காப்பாற்றுவார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04