திருகோணமலை - தம்பலகமம் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில்  இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே 18 வயதுடைய இளைஞர் பலியாகியுள்ளார்.

கிண்ணியாவில் இருந்து தம்மலகமம் நோக்கி மோட்டர் சைக்கிளில் பயணித்த குறித்த இரு இளைஞர்கள், தம்பலகமம் - கிண்ணியா வீதி, கோவிலடி சந்தியில்  எதிரே வந்த லொறியுடன் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் பலியாகியுள்ளதுடன் மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிவேகமாக மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் போட்டிக்கு ஓடியே போதே குறித்த மோட்டார் வைக்கிளில் கட்டுப்பாடின்றி லொறியுடன் மோதியுள்ளமையே இந்த கோர விபத்துக்கு காரணம் ஆகும்.