பேராதனை - களு பாலத்தின் அருகாமையில், கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பொடி மெனிக்கே ரயில் முன் பாய்ந்து யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  

பன்னிபிடிய கலல்கொடை பிரதேசத்தினை சேர்ந்த 25 வயதுடைய யுவதியே  இவ்வாறு நேற்றைய தினம் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பேராதனை பல்கலைகழகத்தில் கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு தற்கொலை கொண்டுள்ளார் என்பதுடன் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்கள் இதுவரையில் அறியப்படாததுடன், சம்பவம் குறித்து மேலதிக விசாணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளது.