சீரற்ற காலநிலை : பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீன பௌத்த சங்கத்தினால் நிவாரணம் நிதி அன்பளிப்பு…!

Published By: Robert

03 Jun, 2017 | 01:56 PM
image

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன பௌத்த சங்கம்  22 மில்லியன் ரூபா நிதி அன்பளிப்பை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கையளித்தது. 

சீன பௌத்த சங்கத்தின் தேரர்கள் இந்த நிதி அன்பளிப்பினை ஜனாதிபதியிடம் கையளித்ததுடன், பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் வண. கல்லேல்லே சுமனசிறி தேரரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

சீன அரசாங்கமானது தொடர்ச்சியாக இலங்கைக்கு வழங்கிவரும் இத்தகைய ஒத்துழைப்புக்களினால் இரு நாட்டிற்கும் இடையிலான நீண்டகால தொடர்புகள் மேலும் விருத்தி அடைகின்றதெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இலங்கை அனர்த்தங்களை சந்திக்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் சீன அரசாங்கம் உதவிகளை வழங்குவதையிட்டு தனது நன்றியைத் தெரிவித்தார். 

அதேபோல் சர்வதேச ரீதியில் கிடைக்கும் நிதி உதவிகளும் சீன அரசாங்கத்தின் நிதி உதவிகளும் சீரற்ற காலநிலையால் அனர்த்தத்திற்குள்ளாகி வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்காக உபயோகப்படுத்தப்படுமென கூறிய ஜனாதிபதி, சீன பௌத்த சங்கத்தின் தேரர்கள் மீண்டும் இலங்கைக்கு வருகை தரும் சந்தர்ப்பத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட வசதிகளை ஏற்படுத்துவதாகவும் உறுதி கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01