ஆட்டிசத்திற்கு நிவாரணமளிக்கும் இரண்டு வித சிகிச்சை

Published By: Robert

03 Jun, 2017 | 09:15 AM
image

ஆட்டிசம் என்பது ஒரு நிறப்பிரிகை (Spectum Disorder) வகையிலான குறைபாடு என்றும் கண்டறியப்பட்டிருக்கிறது. அதாவது ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரே மாதிரியாகவோ அல்லது ஒரே அளவிலான பாதிப்புகளுடனோ இருப்பதில்லை. இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மொழியைப் புரிந்துகொள்வதிலும்,மற்றவர்களுடன் இயல்பாக உரையாடி புரிந்துகொள்வதிலும் தான் சிரமப்படுவார்கள். இதில் சில குழந்தைகளுக்கு முழுமையான பேச்சுத்திறன் இருக்காது. அத்துடன் சைகைகள், முகபாவனைகள் மற்றும் குரலின் தன்மையைப் புரிந்துகொள்வதில் தடுமாறுவார்கள். அதே போல எதிராளிகள் கேட்கும் கேள்விகளை புரிந்துகொண்டு பதிலளிப்பதிலும் மிகுந்த தாமதமோ அல்லது தடுமாற்றமோ இருக்கும். அதே போல பதிலை யாராவது சொன்னாலும் அதை கேட்டு திருப்பிச் சொல்வதிலும் சிரமப்படுவார்கள். இப்படி வகைகளில் ஆட்டிசம் குழந்தைகளை பாதிக்கிறது.

இந்த குறைபாடுள்ள குழந்தைகள் தனி உலகத்தில் இருப்பதைப் போன்றிருப்பார்கள். இவ்வகையான குழந்தைகளை பிறந்து ஓராண்டிற்குள் கண்டறிவது கடினம் என்றாலும், அவர்களின் நாளாந்த நடவடிக்கையை உற்று கண்காணித்து பார்த்தால் இதனை கண்டுணர முடியும். அதாவது குழந்தைகள் பெற்றோர்களின் கண்ணைப் பார்த்து பதிலளிக்கமாட்டார்கள். ஏனைய மழலைகள் செய்யும் சேட்டை மற்றும் குறும்புகளை இவர்கள் செய்யமாட்டார்கள். இதுபோன்றசில நுட்பமான அறிகுறிகளை வைத்து தான் இதன் பாதிப்புள்ள குழந்தைகளை கண்டறிய இயலும்.

பொதுவாக ஆட்டிசம் பாரம்பரிய மரபணுக்களின் குறைபாடுகளால் தான் வருகின்றன என்பதை கண்டறிந்திருக்கிறார்கள். உயிர்ச்சத்துகளின் குறைபாடு, சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற சில காரணிகளாலும் ஆட்டிசம் பாதிப்பு ஏற்படக்கூடும்.

இதற்கான பிரத்யேக சிகிச்சை முறை கிடையாது. தற்போது மருந்துகளாலான சிகிச்சையும், குணநலன்களை மேம்படுத்துவதற்கான சிகிச்சையும் என இரண்டு சிகிச்சைகள் இதற்காக நடைமுறையில் இருக்கிறது.

Dr. மனோஜ்குமார்.

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29