அண்மையில் நாட்டில் ஏற்பட்ட சீரற்றகாலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கையில் ஈடுபட்ட போது விபத்திற்குள்ளான எம்.ஐ. 17 என்ற ஹெலிக்கொப்டர் இலங்கை விமானப்படையினரால் விபத்திற்குள்ளான பகுதியில் இருந்து மீட்டெடுத்துச் செல்லப்பட்டது.

சீரற்றகாலநிலையால் பத்தேகம பிரதேசத்தில் இடம்பெயர்ந்த கிராமம் ஒன்றுக்கு நிவாரணப் பொருட்களுடன் இலங்கை விமானப்படைக்கு சொந்ததமான ஹெலிகொப்டர் ஒன்று தொழில்நுட்பக்கோளாறு காரணமாக பத்தேக பிரதேசத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானது.

இதன்போது குறித்த ஹெலிகொப்டரில் 11 பேர் பயணித்துள்ள நிலையில், எவருக்கும் எந்தப்பாதிப்பும் ஏற்டவில்லை.

இந்நிலையில் குறித்த பகுதியில் வெள்ளம் வடிந்தோடி இயல்புநிலை உருவாகியதையடுத்து விபத்திற்குள்ளான ஹெலிகொப்டர் இலங்கை விமானப்படையினரால் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.