நந்திக்கடல் வட்டுவாகல் பகுதியில் இலட்சக்கணக்கில் இறந்து மிதக்கும் மீன்கள் !

Published By: Robert

02 Jun, 2017 | 03:23 PM
image

முல்லைத்தீவில் நந்திக்கடல் வட்டுவாகல் ஆற்றுப்பகுதியில் இலட்சக்கணக்கான மீன்கள் மர்மமான முறையில் இறந்து கரையொதுங்கியுள்ளது.

இதன் காரணமாக வட்டுவாகல் பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசுவதை காணக்கூடியதாக உள்ளது. மேலும், இறந்த மீன்களை அகற்றுவதற்கு இயந்திர உதவியுடன் அப்பகுதி மீனவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முல்லைத்தீவில் தொடரும் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக நந்திக்கடலின் வட்டுவாகல் பகுதியின் நீர் மட்டம் குறைந்துள்ளது.

இதன் காரணமாகவே வட்டுவாகல் பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக மேலும் மீனவர்கள் கருத்து வெளியிடுகையில்,

மக்களை வாழ வைக்கும் இந்த நந்திக்கடலின் வட்டுவாகல் பகுதியின் நீர்மட்டம் தற்பொழுது மிகக்குறைவடைந்துள்ளது.

தொடரும் வெப்பநிலை அதிகரிப்பினால் மீன்கள் இறந்துள்ளன. இதனால் எமது சிறு கடல்தொழில் பாதிப்படைந்துள்ளது.

குறித்த நந்திக்கடலில் தேங்கியுள்ள சேற்று மண்ணை அகற்றுவதன் மூலம் மழைக்காலத்தில் அதிகமான மழைநீரை தேக்கி வைக்க முடியும்.

இது தொடர்பாக அரசாங்கம் கவனம் எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மீனவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மேலும், பொதுமக்கள் அதிக விலை கொடுத்து ஆழ்கடல் மீன்களை கொள்வனவு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01