(பா.ருத்ரகுமார்)

வெள்ளம் மற்றும் மண்சரிவினால் 7600 கர்ப்பிணி பெண்களும் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களும் ஒரு இலட்சத்து 89 ஆயிரம் சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட காரியாலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுகாதார அமைச்சின் கோரிக்கைக்கேற்ப ஐக்கிய நாடுகளின் குடும்ப கட்டுப்பாட்டு அமைப்பினால் சிறுவர்களுக்கான 10 ஆயிரம் உள்ளாடை அடங்கிய பொதியையும் கர்ப்பிணி பெண்களுக்கான 2000 உள்ளாடை அடங்கிய அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதியும் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடகாரியாலயம் தெரிவித்துள்ளது.