பாதிப்புக்குள்ளான மக்களுக்கு இலவச மின் விநியோகம்

Published By: Robert

02 Jun, 2017 | 11:01 AM
image

இயற்கை அனர்த்­தத்­தினால் பாதிப்­புக்­குள்­ளான மக்­க­ளுக்கு இல­வச மின் விநி­யோ­கத்தை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக மின்­வலு மற்றும் மீள் புதுப்­பிக்க சக்தி அமைச்சர் ரஞ்­சித்­ சி­யம்­ப­லாப்­பிட்­டிய குறிப்பிட்டுள்ளார்.

அத்­துடன் மின் விநி­யோ­கத்தில் ஏதேனும் தடை மற்றும் பாதிப்­புகள் ஏற்­பட்­டி­ருக்­கு­மாயின் 0113030303 என்ற அமைச்சின் அவ­சர தொலை­பேசி இலக்­கத்­துக்கு தொடர்பு கொண்டு முறைப்­பா­டு­களை முன்­வைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாத்­த­றையில் அமைந்­துள்ள மின்­சார பாவ­னை­யாளர் மத்­திய நிலை­யத்தில் மின்­வி­நி­யோக நட­வ­டிக்­கைகள் குறித்து ஆராய்ந்த பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

நாட்டில் ஏற்­பட்­டுள்ள அசா­தா­ரண கால­நிலை மாற்­றத்­தினால் வெள்ளம் மற்றும் மண்­ச­ரிவால் நாட­ளா­விய ரீதி­யி­லான மக்கள் பெரும் பாதிப்­புக்­களை எதிர்­நோக்­கி­யி­ருந்­தனர். குறித்த அனர்த்த நிலை­மை­களின் போது மக்­களின் பாது­காப்­பினை கருத்­திற் ­கொண்டு பாதிப்­பேற்­பட்­டுள்ள பகு­தி­களில் மின்­சார விநி­யோகம் இடை நிறுத்தம் செய்­யப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லையில் தற்­போது மீண்டும் குறித்த பாவ­னை­யா­ளர்­க­ளுக்­கான மின்­வி­நி­யோகம் வழங்­கப்­பட்டு வரு­கின்ற நிலையில் அனர்த்­தத்­தினால் பாதிப்­புக்­குள்­ளான பகு­தி­களில் காணப்­படும் மின்­சார கட்­ட­மைப்­புக்கள் சீர­மைக்­கப்­பட்டு தடை­யற்ற மின்­சா­ரத்தை வழங்க எதிர்­பார்த்­துள்ளோம். அந்­த­ வ­கையில் நாட­ளா­விய ரீதியில் 6 இலட்­சத்து 25 ஆயிரம் மின்­சார பாவ­னை­யா­ளர்­க­ளுக்­கான மின் விநி­யோ­கத்­தடை ஏற்­பட்­டி­ருந்­தது. அவர்­களில் ஒரு இலட்­சத்து 77 ஆயி­ரத்து 775 பேருக்­கான மின்­வி­நி­யோ­கமே தற்­போது வழங்­கப்­ப­ட­வுள்­ளது. 

தென் மாகா­ணத்தில் 2 இலட்­சத்து 53 ஆயி­ரத்து 130 பேருக்­கான மின் விநி­யோ­கத்­தடை ஏற்­பட்­டி­ருந்த நிலையில் அவர்­களில் 1 இலட்­சத்தி 89 ஆயி­ரத்தி 300 பேருக்­கான மின்­ வி­நி­யோகம் வழங்­கப்­பட ­வி­ருக்­கின்­றது. 

இந்­ நி­லையில் முற்­றாக வீடு­களை இழந்­த­வர்­க­ளுக்கு இல­வச மின் இணைப்பை வழங்­க­வுள்­ள­துடன்  தற்­கா­லிக கூடா­ரங்­களில் தங்­கி­யி­ருப்­ப­வ­ர­்க­ளுக்கு 6 மாத ­காலப்­ப­கு­திக்கு இல­வச மின்­சா­ரத்தை வழங்­கவும், மின்­மா­னியில் ஏதேனும் பாதிப்­பேற்­பட்­டி­ருக்­கு­மாயின் அதனை திருத்­து­வ­தற்கும் நிலு­வைத்­தொகை­யினை  செலுத்­து­வ­தற்கு 6 மாத கால அவ­கா­சத்­தினை வழங்­கு­வ­தற்கும் எதிர்­பார்த்­துள்ளோம்.

அத்துடன் அனர்த்தம் காரணமாக மின்சார விநியோகத்தில் தடை ஏற்பட்டிருக்குமாயின் அல்லது பாதிப்பு ஏற்பட்டிருக்குமாயின் அமைச்சின்  0113030303 என்ற அமைச்சின் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22