மாத்தறை தெவுந்தர துறைமுகத்தில் இருந்து இனோக்கா என்ற பெயருடைய படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்ற 6 மீனவர்கள் தொடர்பாக, கடந்த 11 நாட்களாக எவ்வித தகவலும் கிடைக்கப்பெறவில்லை என அவர்களது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இறுதியாக கடந்த 9 ஆம் திகதி கடலில் உள்ள மற்றைய மீனவர்களிடம் உதவி கோரியதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர்.