பிலிப்பைன்ஸின் தலைநகரான மணிலாவில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 37 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பிலிப்பைன்ஸின் தலைநகரான மணிலாவிலுள்ள களியாட்ட விடுதியொன்றுக்குள் புகுந்த ஆயுததாரியொருவர் திடீரென துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதாகவும் பின்னர் குறித்த ஆயுததாரி தன்னைத்தானே சுட்டு தற்கொலைசெய்துகொண்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு எந்த தீவிரவாத அமைப்பும் உரிமைகோராத நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தாக்குதலாக இருக்கலாமென மணிலா பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.