(எம்.ஆர்.எம்.வஸீம்) 

நீர் கட்டணம் திருத்தியமைக்கப்படவேண்டும். இல்லாவிட்டால் அதன் நஷ்டத்தை நீர்ப்பாசன திணைக்களமே ஏற்றுக்கொள்ளவேண்டிவரும் என நீர்வழங்கல் மற்றும் நகர திட்டமிடல் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணாந்து புள்ளே தெரிவித்தார்.

அஞ்சல் மற்றும் உப அஞ்சல் அலுவலகங்கள் ஊடாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் வாடிக்கையாளர்களின் நீர்ப்பட்டியல் பாரமெடுக்கும் ஆரம்ப நிகழ்வு நேற்று கொழும்பு குருந்துவத்த அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.